Advertisment

லஞ்ச வழக்கில் கல்லூரி இணை இயக்குனர் அலுவலக உதவியாளருக்கு 3 ஆண்டு சிறை

உதவிப் பேராசிரியர் சக்திவேல் என்பவருக்கு அவரது பதவி உயர்வுக்குரிய 19 மாத நிலுவைத்தொகையை வழங்க, ரூ.2,000/ லஞ்சம் வாங்கியது தொடர்பாக அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

author-image
WebDesk
New Update
tamilnews, trichy news, latest tamil news, latet trichy news, Tiruchirappalli, Tamilnadu

தஞ்சாவூர் மாவட்டம், உள்ள அ. வீரைய்யா வாண்டையார் நினைவு புஷ்பம் கல்லூரி (தன்னாட்சி)யில் இயற்பியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணிபுரிந்து வந்த சக்திவேல் என்பவருக்கு அவரது பதவி உயர்வுக்குரிய 19 மாதங்களுக்கான நிலுவைத்தொகையை வழங்க, ரூ.2,000/ லஞ்சம் வாங்கியது தொடர்பாக கல்லூரி இணை இயக்குநர் அலுவலக உதவியாளர் வேணுகோபால் என்பவர் மீது ஊழல் தடுப்பு காவல் தடுப்புச்சட்டம் - 1988ன்படி (18.01.2012)ம் தேதி குற்ற பதிவு செய்யப்பட்டது.

Advertisment

தொடர்ந்து மேற்கொண்ட பொறிவைப்பு நடவடிக்கையில், புகார்தாரர் சக்திவேல் என்பவரிடம் கையூட்டு பணம் ரூ.2,000/-த்தை பெற்ற வேணுகோபால் திருச்சி ஒழிப்பு போலீசாரால் செய்யப்பட்டார். மேற்படி வழக்கானது விசாரணை இன்று (17.03.2023) திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன், முன்னாள் கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் அலுவலக உதவியாளர் வேணுகோபால், என்பவருக்கு லஞ்சப்பணம் கேட்டுப்பெற்ற குற்றத்திற்காக ஓராண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.10,000/- அபராதமும், அபராதத்தை தவறினால் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்ததோடு, மேற்கண்ட தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.

மேற்படி வழக்கில் சக்திவேல் திறம்பட சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர் செய்தும், அவரது தரப்பு வழக்கறிஞராக சுரேஷ்குமார் என்பவர் முறையாக வழக்கு நடத்தி குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்றுத்தந்துள்ளனர்.

செய்தி: க. சண்முகவடிவேல்

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Thanjavur Tiruchirappalli
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment