scorecardresearch

தமிழக யானைப் பாகன்களுக்கு தாய்லாந்தில் பயிற்சி? ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு

ரூ.50 லட்சம் செலவில் யானை பாகன்களுக்கு பயிற்சி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கை டிசம்பர் 14ஆம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

மெட்ராஸ் உயர் நீதிமன்றம்
மெட்ராஸ் உயர் நீதிமன்றம்

தமிழ்நாட்டில் உள்ள யானைகள் முகாம்களில் பணிபுரியும் பாகன்களை, 50 லட்சம் ரூபாய் செலவில் பயிற்சிக்காக தாய்லாந்து அனுப்புவது தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அச்செயலை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை டிசம்பர் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

50 லட்சம் ரூபாய் மதிப்பில் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டிற்காக நான்கு வனத்துறை அதிகாரிகளுடன் ஆறு யானை பாகன்களை தாய்லாந்துக்கு அனுப்ப முடிவுசெய்தனர்.

யானைகளைப் பராமரிப்பதில் பயிற்சி மற்றும் திறனை வளர்ப்பதற்காக யானை பாகங்களை தாய்லாந்திற்கு அனுப்பும் தமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்து மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனு அளித்த ஆர்வலர் எஸ் முரளிதரன் கூறுகையில், “வனத்துறை கால்நடை மருத்துவர்களுக்கே இந்த பயிற்சி தேவை, யானை பாகன்களுக்கு அல்ல” என்றார். மேலும், “இந்த பயிற்சிக்காக செலவிடும் தொகையை ஊக்கத்தொகையாக வழங்கலாம்” என்று அவரது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை உயர் நீதிமன்றம் வருகின்ற டிசம்பர் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Courts news download Indian Express Tamil App.

Web Title: 50 lakhs rupees worth of mahouts training in thailand case madras hc