Advertisment

கொரோனா தடுப்புப் பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்த தடைகோரிய வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி

பெண் காவலர்கள் பணிபுரிந்து வரும் நிலையில், ஆசிரியர்களும் இந்த தருணத்தில் பணிபுரிய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chennai High court, Drug Addiction

TN Latest News Live

கொரோனா தடுப்புப் பணிகளில் மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்த சென்னை மாநகராட்சிக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Advertisment

சி.பி.எஸ்.இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் அறிவிப்பு

கொரோனா பரவலை தடுக்க, தொற்று பாதித்தவர்களை வீட்டில் தனிமைப்படுத்துவது போன்ற பணிகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. இப்பணிகளுக்கு சென்னை மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்துவது என முடிவு செய்து, உத்தரவும் பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி, தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சென்னை மாவட்ட செயலாளர் சீனிவாசன் தொடர்ந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வீட்டு தனிமைப்படுத்தல் திட்டங்களை அமல்படுத்தவும், ஒருங்கிணைப்பு வழங்கவும் 200 ஆசிரியைகளை ஈடுபடுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே இப்பணியில் அனுபவமில்லாத ஆசிரியை ஒருவர் ஈடுபட்டு கொரோனா தொற்றுக்கு ஆளாகி அவரது குடும்பத்தினர் கடும் துயரத்திற்கு ஆளாகியுள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே கொரோனா தடுப்பு பணிகளுக்கு ஆசிரியர்களை ஈடுபடுத்த மாநகராட்சி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், ஆசிரியர்கள் களப்பணிக்கு அனுப்பப்படுவது இல்லை என்றும் தன்னார்வலர்களை ஒருங்கிணைப்பு மற்றும் அவர்களை கண்காணிப்பு  மேற்கொள்வதாக தெரிவித்தார். ஆசிரியர்கள் நேரடியாக களத்திற்கு செல்வதில்லை என்றும் அவர்கள் அலுவலக ரீதியான வேலை பார்ப்பதாகவும் தெரிவித்தார். மேலும் உரிய பாதுகாப்பு அம்சங்கள் மற்றுப் பயிற்சி வழங்கப்படுகிறது எனக் குறிப்பிட்டார்.

பத்மநாபசுவாமி கோயிலை மன்னர் குடும்பமே நிர்வகிக்கலாம் – உச்சநீதிமன்றம் உத்தரவு

அனைத்து தரப்பு வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், ஆசிரியர்கள் என்பவர்கள் இயற்கையாகவே தலைமை பொறுப்பு கொண்டவர்கள். இது போன்ற பேரிடர் காலத்தில் ஆசிரியர்களின் சேவையை நீதிமன்றம் எதிர்பார்ப்பதாக தெரிவித்தனர். இது போன்ற பேரிடர் காலங்களில் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக ஆசிரியர்கள் இருக்கவேண்டும். ஆசிரியர்களும் பொது ஊழியர் தான் என்றும் அவர்களுக்கும் நாட்டின் மீது அக்கறை இருக்க வேண்டும் எனவும், அவர்கள் முன்மாதிரியாகத் திகழ வேண்டும் என்றும் தெரிவித்தனர். தற்போது பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் பெண் காவலர்கள் பணிபுரிந்து வரும் நிலையில், ஆசிரியர்களும் இந்த தருணத்தில் பணிபுரிய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படும் ஆசிரியர்களுக்கு போதிய பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள் ஆசிரியர்களை கொரோனா பணிக்கு தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Chennai High Court Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment