Advertisment

வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க என்ன திட்டம்? மத்திய அரசு பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

விவரங்களை அறிக்கையாக சமர்ப்பிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Madras High court order, It is illegal to give promotions and seniority to govt employees, சென்னை உயர் நீதிமன்றம், தமிழக அரசு, அரசு ஊழியர்கள், பதவி உயர்வு, பணி மூப்பு, இடஒதுக்கீடு, illegal to give promotionson reservation basis, tamilnadu govt

Madras High court order, It is illegal to give promotions and seniority to govt employees, சென்னை உயர் நீதிமன்றம், தமிழக அரசு, அரசு ஊழியர்கள், பதவி உயர்வு, பணி மூப்பு, இடஒதுக்கீடு, illegal to give promotionson reservation basis, tamilnadu govt

chennai high court asking question to central gov : வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசிடம் உள்ள திட்டம் என்ன? பல்வேறு இடங்களில் சிக்கித் தவிப்பவர்களுக்கு வழங்கியுள்ள நிவாரண உதவிகள் என்னென்ன? என்பன குறித்த விவரங்களை அறிக்கையாக சமர்ப்பிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

கொரோனா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு வர விமானங்களை இயக்குவதற்கு நடைமுறைகளை மத்திய அரசு கடந்த 5ஆம் தேதி அறிவித்து இருந்தது அதனடிப்படையில் வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 60,942 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர் ..

மத்திய அரசின் அனுமதியை தொடர்ந்து பல்வேறு நாடுகளிலிருந்து அனைத்து மாநிலங்களுக்கும் விமான போக்குவரத்து துவங்கி உள்ளது ஆனால் தமிழகத்தில் விமானப் போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை இதை எதிர்த்து திமுக சார்பில் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்

அந்த மனுவில் மத்திய அரசின் உத்தரவை மீறும் வகையில் தமிழக அரசு விமானங்கள் இயக்க தடை விதித்துள்ளதால் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உணவு ,உறைவிடம் ,மருத்துவ உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் கடந்த இரண்டு மாதமாக மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார் .

மத்திய அரசின் அதிகாரத்தில் மாநில அரசு தலையிடமுடியாது எனவும் மத்திய அரசின் அதிகாரத்தை மீறி முடிவெடுக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்

மத்திய அரசின் உத்தரவை பின்பற்றி வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்டு வர ஏதுவாக தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறங்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்

சென்னை ராயபுரத்தில் 5 ஆயிரத்தை நெருங்குகிறது கொரோனா பாதிப்பு

இந்த மனு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ் குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தி.மு.க., சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், கொரோனா தொற்று பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் லட்சக்கணக்கான இந்தியர்களும், ஆயிரக்கணக்கான தமிழர்களும் வெளிநாடுகளில் சிக்கத் தவித்து வருவதாகவும், அவர்கள் அந்தந்த நாடுகளில் உள்ள இந்திய தூதரகத்தை அணுகி தங்களை சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை கொண்டு வர மத்திய அரசு நடைமுறைகளை வகுத்திருந்த போதும், தமிழகத்தில் விமானங்கள் தரையிறங்க மாநில அரசு அனுமதி மறுப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

இதையடுத்து, வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களின் விவரங்கள், இதுவரை இந்தியாவிலும், தமிழகத்திலும் இயக்கப்பட்ட விமானங்கள் எத்தனை, சிக்கியுள்ள மீதமுள்ளவர்களை மீட்க இந்திய அரசின் திட்டம் என்ன, பல்வேறு இடங்களில் சிக்கித் தவிப்பவர்களுக்கு வழங்கியுள்ள நிவாரண உதவிகள் என்னென்ன என்பன குறித்த விவரங்களை அறிக்கையாக சமர்ப்பிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

அதேபோல, தமிழக விமான நிலையங்களில் தரையிறங்க எத்தனை விமானங்களுக்கு அனுமதி கோரப்பட்டது, அந்த கோரிக்கைகள் மீது எடுத்த முடிவுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 19 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment