Advertisment

கட்டண நிர்ணய குழுவை அணுக தனியார் சுயநிதி கல்லூரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

கட்டண நிர்ணயக் குழு தலைவராக இருந்த ஓய்வு பெற்ற நீதிபதி இறந்து விட்டதால், கல்லூரிகளின் கோரிக்கைகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chennai High Court, B.ed college fees

Latest TN News Live

தனியார் ஆசிரியர் கல்வி கல்லூரிகளுக்கு கட்டண நிர்ணய உத்தரவுக்கு எதிராக கட்டண நிர்ணய குழுவை அணுக தனியார் சுயநிதி கல்லூரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

சர்வதேச அளவில் 10 மில்லியனை தாண்டிய கொரோனா பாதிப்பு – இந்தியா இன்னமும் சேஃப் தான்

தமிழகத்தில் உள்ள ஆசிரியர் கல்வி கல்லூரிகளுக்கு கட்டணங்களை நிர்ணயிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து தமிழக உயர் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்தது. இக்குழு, 2016-ம் ஆண்டு கல்லூரிகளின் செலவுக் கணக்கு விவரங்களைக் கேட்டு, கட்டணங்களை நிர்ணயித்தது. 2016 – 17 முதல் 2018 – 19 வரையிலான மூன்று கல்வியாண்டுகளுக்கு இந்த கட்டணங்கள் அமலில் இருந்தன.

2019 – 20 முதல் 2021 – 22 ம் கல்வியாண்டுகளுக்கான கட்டணங்களை நிர்ணயித்து கட்டண நிர்ணயக் குழு 2019 செப்டம்பர் 12-ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. விதிகளை பின்பற்றி கட்டணங்கள் நிர்ணயிக்கப்படவில்லை எனக் கூறி, கட்டண நிர்ணயக் குழு உத்தரவை ரத்து செய்யக் கோரியும், அந்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரியும், தமிழ்நாடு சுயநிதி கல்வியியல் கல்லூரிகள் சங்கம் சார்பில் அதன் பொதுச் செயலாளர் நடராஜன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில், தமிழகத்தில் மொத்தமுள்ள 696 கல்லூரிகளில், 285 கல்லூரிகள் கட்டண விகிதங்களை சமர்ப்பித்ததன் அடிப்படையில், செலவுகள் குறித்த ஆவணங்களை சமர்ப்பித்த 85 கல்லூரிகளுக்கு, ஒரு மாணவருக்கு 42 ஆயிரத்து 500 ரூபாய் என கட்டணம் நிர்ணயித்தது.

கட்டண நிர்ணயத்திற்கான ஆவணங்களை சம்ரப்பிக்காத 200 கல்லூரிகளுக்கு 25 ஆயிரிம் ரூபாயும், பல்வேறு மாவட்டங்களில் உள்ள 411 கல்லூரிகள் கட்டண விகிதங்களை சமர்ப்பிக்காததால், அவற்றுக்கு 22ஆயிரத்து 500 ரூபாயும் கட்டணமாக நிர்ணயித்து கட்டண நிர்ணயக் குழு உத்தரவிட்டது.

அந்த உத்தரவில் கட்டண விகிதங்களை மாற்றியமைக்கக் கோரி உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க கல்லூரிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டதன் அடிப்படையில், பல கல்லூரிகள் கட்டண விகிதத்தை மாற்றியமைக்க கோரி விண்ணப்பித்த நிலையில், கட்டண நிர்ணயக் குழு தலைவராக இருந்த ஓய்வு பெற்ற நீதிபதி இறந்து விட்டதால், கல்லூரிகளின் கோரிக்கைகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தனியார் ஆசிரியர் கல்வி கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பான குழுவுக்கு புதிய தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி கே.வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் விலை : மாட்டு வண்டிகளில் வந்து காங்கிரஸார் போராட்டம்

இந்த குழுவை அணுக தங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், கட்டண விகிதத்தை மாற்றியமைக்க கோரி கட்டண நிர்ணயக் குழுவை அணுக மனுதாரர் கல்லூரிகளுக்கு அனுமதியளித்து, வழக்கை முடித்து உத்தரவிட்டனர்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Chennai High Court Madras High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment