உள்ளாட்சி தேர்தல், கட்டாய ஹெல்மட் போன்ற வழக்கு தீர்ப்பின் போது தன்னை பற்றி சமூக வலைதளங்களில் மீம்ஸ் வெளிவந்தததாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் வேதனை தெரிவித்தார்.
நீட் தேர்வால் மருத்துவ கல்வி படிக்க முடியாமல் பாதிக்கப்பட்ட மாணவர்கள், பெற்றோர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க குழு அமைக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, வழக்கறிஞர் சூர்ய பிரகாசம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், அரசு பள்ளி ஆசிரியர்களின் போராட்டத்தை கடுமையாக கண்டித்தார்.
இந்த வழக்கு மீண்டும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி என்.கிருபாகரன், ”நீதிமன்ற உத்தரவுகளுக்கும், நீதிபதிகளுக்கும் எதிராக கருத்துக்களை தெரிவிக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு தனிப்பட்ட நபர் மீது குற்றம் சுமத்தினால் அவர் காவல் நிலையத்திலோ, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திலோ புகார் அளிப்பார்கள். ஆனால் அந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி யாரிடமும் புகார் அளிப்பதில்லை என்பதால் கட்டுப்பாடில்லாமல் சமூகவலைதளங்களில் பதிவேற்றம் செய்கிறார்கள். இதை தடுக்க வேண்டிய சென்னை காவல் ஆணையர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் அவரை நேரில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என தெரிவித்தார். அதற்கு அரசுத்தரப்பில் ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்டுகின்றனர்.”, என கூறினார். அதற்கு, உரிய ஆதாரங்களை தாக்கல் செய்தால் நடவடிக்கை எடுப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது, நீதிபதி என்.கிருபாகரன், “உள்ளாட்சி தேர்தல், கட்டாய ஹெல்மட் போன்ற வழக்கு தீர்ப்பின் போது தன்னை பற்றி சமூக வலைதளங்களில் இது போன்ற மீம்ஸ் வெளிவந்தன என்று வேதனை தெரிவித்தார்.
மேலும் சமூக வலைதளங்களில் வரக்கூடிய விவரங்களை தாக்கல் செய்யுமாறும், செப்டம்பர் 18-ம் தேதி அதனை விசாரிப்பதாகவும் நீதிபதி கிருபாகரன் தெரிவித்தார்.
இதனையடுத்து, ஆசியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கை நியாமனது தான் ஆனால் போராடும் வழிமுறை தான் தவறானது என நீதிபதி கருத்து தெரிவித்தார்.
அப்போது அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆசிரியர்களுக்கு 26 ஆயிரம் ரூபாய் முதல் 30 ஆண்டுகள் அனுபவம் உள்ள ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் களுக்கு 91 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்குவதாக தெரிவித்தார்.
இந்த போராட்டத்தில் அரசு முறையாக செயல்படவில்லை, ஓய்வு பெறும் ஊழிகளுக்கு வழங்கப்பட வேண்டிய பணபலன்கள் வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
தன் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் அரசு தன்னுடைய பங்களிப்பு தொகையை செலுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுத்துள்ளது. இதை வலியுறுத்தி தான் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதில் அரசின் தவறும் உள்ளது. புதிய ஓய்வூதியத் திட்டத்தில் அரசு தன் பங்களிப்பை செலுத்தாமல் அலட்சியமாக இருந்தால் அதையும் நீதிமன்றம் கேள்வி கேட்கும் என நீதிபதி தெரிவித்தார்.
அரசு தன் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் தன்னுடைய பங்களிப்பு தொகை செலுத்தப்படுகிறதா? செலுத்தவில்லை எனில் ஏன் செலுத்துவதில்லை? அரசு தன்னுடைய தொகையை எப்போது செலுத்துவீர்கள்? 2003 ஆம் ஆண்டிற்கு பிறகு ஓய்வு பெற்றவர்களுக்கு தன் பங்களிப்பு ஓய்வூதியம் வழங்கப்பட்டதா? வழங்கப்படவில்லையெனில் அதற்கான காரணம் என்ன? என்பது தொடர்பான கேள்விகளுக்கு திங்கள்கிழமை பதில் அளிக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கில் எதிர் மனுதராராக நீதித்துறை செயலாளரையும் சேர்க்க உத்தரவிட்டு அடுத்த விசாரணை அன்றைய தினத்திற்கு
தள்ளிவைத்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.