துக்க நிகழ்ச்சி மற்றும் மருத்துவ காரணங்களுக்காக வெளியூர் செல்ல அனுமதி கேட்டு விண்ணப்பிக்கும் போது, உடனடியாக பாஸ் வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
காய்கறி நேரடி கொள்முதல் : 12-ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்கா விட்டால் அபராதம்
கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், திருமணம், மருத்துவம் மற்றும் இறுதிச் சடங்குகளில் பங்கேற்பதற்காக வெளியூர் செல்பவர்களுக்கு அவசர பாஸ்கள் வழங்கப்படுகின்றன. இந்த அனுமதிச் சீட்டுகள் மின்னணு முறையில் வழங்கப்படுகிறது. அதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் போது, அனுமதிச் சீட்டுக்கள் தாமதமாக வழங்கப்படுகிறது.
மருத்துவம் மற்றும் துக்க நிகழ்ச்சி காரணங்களுக்காக வெளியூர் பயணிப்பவர்களுக்கு தாமதமாக அனுமதிச் சீட்டு வழங்குவதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், மின்னணு அனுமதிச் சீட்டுகள் வழங்கும் கட்டுப்பாட்டு அறைகள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே செயல்படுவதால், அவசர கால பயணங்களுக்கு அனுமதிச் சீட்டு கோரி விண்ணப்பிக்க ஒரு நாள் காத்திருக்க வேண்டியுள்ளதாக புகார் தெரிவித்துள்ளார்.
பள்ளியில் வைத்து தரப்பட்ட டாஸ்மாக் டோக்கன்கள்! முதல்வர் மாவட்டத்தில் நடந்த அவலம்!
இந்த மனு இன்று நீதிபதிகள் வினித் கோத்தாரி, புஷ்பா சத்யநாரயணா அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, திருமணம், துக்க நிகழ்ச்சி மற்றும் மருத்துவ காரணங்களுக்காக வெளியூர் செல்ல அனுமதி கேட்டு விண்ணப்பிக்கும் போது, உடனடியாக பாஸ் வழங்க நடவடிக்கை எடுப்பது தொடர்பாக பரிசீலிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும், இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை மே 11-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”