ராஜராஜ சோழன் விவகாரம் : இயக்குனர் பா.ரஞ்சித்தை வரும் 19ம் தேதி வரை கைதுசெய்ய தடை

இயக்குனர் பா. ரஞ்சித்தை வரும், 19ம் தேதி வரை கைது செய்ய போலீசாருக்கு தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Tamil nadu news today live updates
Tamil nadu news today live updates : ரஞ்சித்தை கைது செய்ய தடை.

ராஜராஜ சோழன் தொடர்பாக, இயக்குனர் பா. ரஞ்சித்தை வரும், 19ம் தேதி வரை கைது செய்ய போலீசாருக்கு தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இயக்குனர் பா ரஞ்சித், தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அங்கு அவர் பேசிய விஷயம், தற்போது அவரை கோர்ட் படியேறும் நிலைக்கு கொண்டுவந்துள்ளது.

அப்படி அவர் என்ன பேசினார்? : மன்னர் ராஜராஜசோழன்தான் மக்களிடம் உள்ள நிலத்தை அபகரித்தவர். அவரது ஆட்சியிலிருந்துதான் ஜாதி பிழவு கட்டமைக்கப்பட்டது. தேவதாசி முறை அவர்கள் ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டது. தற்போது ராஜராஜ சோழன் எங்களின் ஜாதிக்காரர் என்று 8 ஜாதிக்காரர்கள் சண்டையிட்டு கொள்கிறார்கள். ராஜராஜ சோழன் ஆட்சிதான் இருப்பதிலேயே இருண்ட ஆட்சி என்று நான் சொல்வேன்” என்று இயக்குனர் ரஞ்சித் பேசியிருந்தார்.

இந்த பேச்சிற்கு பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளிடமிருந்தும், அரசியல் பிரமுகர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
ரஞ்சித்தை, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டும் என்று கருத்து ஒலிக்க தொடங்கிய நிலையில், அவர் முன்ஜாமின் கோரி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனு, இன்று விசாரணைக்கு வந்தது. ரஞ்சித்திற்கு முன்ஜாமின் வழங்க, அரசு தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில், ரஞ்சித்தை வரும் 19ம் தேதி வரை, போலீசார் கைது செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தடைவிதித்தனர். அன்றைய தினம், திருப்பனந்தாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் பதில்மனு தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Get the latest Tamil news and Courts news here. You can also read all the Courts news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Chennai high court madurai bench rajaraja chozhan pa ranjith

Next Story
நடிகர் சங்க தேர்தலுக்கு தடைவிதிக்க கோரிய வழக்கு : விசாரணை ஒத்திவைப்புadi dravida students college fee case chennai high court anna university - ஆதி திராவிட மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தை திருப்பித் தர ஐகோர்ட் உத்தரவு!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com