/tamil-ie/media/media_files/uploads/2020/05/Tamil-nadu-government-Chennai-High-Court.jpg)
Tamil nadu government, Chennai High Court
ஊரடங்கு காரணமாக, காய்கறிகள், பழங்களை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யக் கோரிய வழக்கில் மே 12-ம் தேதிக்குள் பதிலளிக்காவிட்டால், அபராதம் விதிக்க நேரிடும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், காய்கறி, பழங்கள் போன்ற விளை பொருட்களை விற்பனை செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளிடம் இருந்து, நேரடியாக கொள்முதல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, வழக்கறிஞர் ராஜேஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு, கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, மனு தொடர்பாக பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
நிலாவுடன் இன்னொரு நிலா : ‘பிங்கி’ மாளவிகா – படத் தொகுப்பு
இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் புஷ்பா சத்திய நாராயணா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, பதில் அளிக்க அரசு தரப்பில் கூடுதல் கால அவகாசம் கோரப்பட்டது. இதுவரை பதில் மனு தாக்கல் செய்யாதது குறித்து தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வரும் 12-ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யாவிட்டால், அபராதம் விதிக்க நேரிடும் என எச்சரித்து விசாரணையை தள்ளிவைத்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.