Advertisment

ஹெல்மெட் விவகாரம் : தமிழக அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர் விதிக்கப்பட்ட அபராதத்தை அதிகரிக்க பிறப்பிக்கபட்ட அரசாணையை ஒரு வாரத்தில் அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today live updates

Tamil Nadu news today live updates

ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர் விதிக்கப்பட்ட அபராதத்தை அதிகரிக்க பிறப்பிக்கபட்ட அரசாணையை ஒரு வாரத்தில் அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

மோட்டார் சட்ட விதிகளின் படி நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் அனைவரும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும், இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டுமென விதிகள் இருந்தும் அதை அரசு முறையாக அமல்படுத்தவில்லை என்றும் அதை அமல்படுத்த அரசுக்கு உத்தரவிட கோரி சென்னையை சேர்ந்த கே.கே.ராஜேந்திரன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று (ஜூன் 12ம் தேதி) நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது. தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், அரவிந்த பாண்டியன், மோட்டார் வாகன சட்ட விதி மீறல் குறித்து புகார் அளிக்க புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அதன் மூலம் இதுவரை 96 புகார் பெறப்பட்டுள்ளளதாகவும் அதில் 45 புகார் மீது நடவடிக்கைகள் எடுக்கபட்டுள்ளதாகவும் 51 புகார்கள் விசாரணையில் உள்ளது என தெரிவித்தார். மேலும் சாலை பாதுகாப்புக்காக 2000 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை 605.55 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 2018-ல் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு எதிராக தமிழகத்தில் 14 லட்சத்து 6 ஆயிரத்து 491 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சீட் பெல்ட் அணியாததற்காக 39 லட்சத்து 2 பேருக்கு எதிராகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார். தற்போது உடனடி அபராதம் வசூலிக்க இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதாகவும், அதற்கு காவல்துறையினருக்கு போதிய பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாகவும், அந்த திட்டத்தை தமிழகம் முழுவதும் அமல்படுத்த 2 வார அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை வரும் ஜூன் 21க்கு தள்ளிவைப்பதாகவும், மோட்டார் வாகன விதிமீறல்கள் தொடர்பான வழக்குகளில் அபராதம் விதிக்கும் அதிகாரத்தை போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்கள் உள்பட அனைத்து காவல் உதவி ஆய்வாளர்களுக்கும் அதிகாரம் வழங்க வேண்டும் எனவும், உடனடி அபராதத்தொகையை அதிகரிப்பது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ஒருவாரத்தில் அமல்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment