தமிழக கோவில்களில் உரிய அனுமதியின்றி நுழைவு கட்டணங்கள் உள்ளிட்டவைகள் வசூலிக்க தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திருவள்ளுவர் மாவட்டம் பெரியபாளயம் பவானி அம்மன் கோவில் அறங்காவலர் சேதுராமன் என்பவர் தொடர்ந்த வழக்கில் பெரிய பாளையம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வாகனங்களுக்கு அப்பகுதியை சேர்ந்த மாயாண்டி என்பவர் கட்டணம் வசூலிப்பதகவும், எந்த உரிய அனுமதி அல்லது அதிகாரமில்லாமல் கட்டணம் வசூலிக்கபடுவதாகவும் எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி ஆர். மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மனுதரார் கோரிக்கையை ஏற்று அனுமதியின்றி கட்டணம் வசூலிக்க தடை விதித்து உத்தரவிட்டர்.
மேலும், நீதிபதி தன்னுடைய உத்தரவில், தமிழக கோயிகளில் சட்டவிரோதமாக நுழைவு கட்டணம், வாகன கட்டணம் உள்ளிட்டவை வசூலிப்பதை தடுக்க தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். மேலும் சட்டவிரோதமாக எந்த அதிகாரமும் இல்லாமல் நுழைவு கட்டணம், வாகண கட்டணம் வசூலிப்பதை கண்காணிக்க வேண்டும். அவ்வாறு வசூலித்தல் அவர்களுக்கு எதிராக அரசு அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
இது தொடர்பாக 30 நாட்களுக்குள் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டர்.
இவ்வாறு அனுமதியின்றி கட்டணம் வசூலிக்கும் நபர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட வருவாய் கோட்டாச்சியர்கள், அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் அறிக்கை அனுப்ப வேண்டும்.
சட்ட விரோதமாக கட்டணம் வசூலிப்பவர்கள் மீது சிவில் மற்றும் கிரிமினல் குற்ற நடவடிக்கைகள் காவல்துறை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டர்.
இது போன்ற அனுமதியின்றி வசூல் செய்யும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தவறும் அதிகாரிகள் அதற்கான பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.
கோயில் நுழைவாயிலகளில் அரசு அங்கீகாரம், உரிய அனுமதி பெற்றவர்கள் மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும்.
இவ்வாறு வசூலிக்கப்படும் கட்டணங்கள் அப்பகுதி மேம்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவுகளை அமல்படுத்தியது குறித்து 12 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி ஆர்.மகாதேவன் வழக்கு விசாரணை 12 வாரத்திற்கு தள்ளிவைத்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.