kolaiyuthir kaalam Stayed: கொலையுதிர் காலம் என்ற தலைப்பில் நடிகை நயன்தாரா நடித்துள்ள படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த எழுத்தாளர் சுஜாதா எழுதிய கொலையுதிர் காலம் நாவலை, அவருடைய மனைவியிடம் இருந்து 10 லட்சம் ரூபாய்க்கு தனது தாய் பெயரில் விடியும் முன் படத்தை இயக்கிய பாலாஜி குமார், வாங்கி அதற்கான உரிமத்தை வைத்திருந்தார்..
Madras High Court Stayed kolaiyuthir kaalam: கொலையுதிர் காலம் படத்திற்கு இடைக்காலத் தடை
இந்நிலையில் நடிகை நயன்தாரா நடிப்பில் கொலையுதிர் காலம் என்ற பெயரில் எட்செக்ட்ரா மற்றும் ஸ்டார் போலாரிஸ் என்ற பட தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள படத்தை ஜூன் 14ம் தேதி வெளியிட திட்டமிட்டிருப்பதாக விளம்பரங்கள் வெளியானது.
தன் தாயார் பெயரில் உரிமை பெற்று வைத்திருக்கும் கொலையுதிர் காலம் என்ற தலைப்பில் திரைப்படம் வெளியிடுவது காப்புரிமையை மீறிய செயல். எனவே கொலையுதிர் காலம் என்ற தலைப்பில் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என பாலாஜி குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி கொலையுதிர் காலம் என்ற பெயரில் நயன்தாரா நடித்த படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து, மனுவுக்கு ஜூன் 21ம் தேதிக்குள் பதிலளிக்கும் படி படத்தயாரிப்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார். மனு தொடர்பான விசாரணையை, நீதிபதி ஒத்திவைத்தார்.