Advertisment

தலித்துகள் தொட்டில் கட்டி உடலை இறக்கிய விவகாரம்: மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

Madras High Court Order: வேலூர் மாவட்டத்தில் தலித்துகள் தொட்டில் கட்டி உடலை இறக்கிய விவகாரம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today live updates

Tamil Nadu news today live updates

வேலூரில் தலித் மக்களான ஆதி திராவிடர் சமுதாயத்தை சேர்ந்தவரின் உடலை கொண்டு செல்ல பிற பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் உடலை தொட்டில் கட்டி பாலத்தில் இருந்து இறக்கி எடுத்துச் செல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்க வேலூர் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

வேலூர் மாவட்டம், நாட்றாம்பள்ளி அடுத்த அலசந்தாபுரம் பகுதியைச் சேர்ந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த குப்பன், ஆகஸ்ட் 19ஆம் தேதி சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்.

மறுநாள் ஆகஸ்ட் 20 ஆம் தேதி குப்பனின் உடலை அடக்கம் செய்வதற்காக உறவினர்கள் உடலை எடுத்து சென்றபோது, அப்பகுதி மற்ற பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த பகுதியிலிருந்த ஒரு மேம்பாலத்தின் வழியாக உடலை தொட்டில் கட்டி கீழே இறக்கி சுடுகாட்டிற்கு எடுத்துச்சென்று உடலை அடக்கம் செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பத்திரிகையில் வெளியான செய்தியை, மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன், நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அமர்வின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.

Madras High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment