பி.எஸ்.என்.எல் இணைப்புகள் முறைகேடாக பயன்படுத்திய வழக்கு விசாரணை தள்ளிவைப்பு

மாறன் சகோதரர்கள் மனுவுக்கு பதிலளிக்க சி.பி.ஐ தரப்பில் கூடுதல் கால அவகாசம்  கோரப்பட்டதால் நவம்பர் 10-க்கு வழக்கு ஒத்திவைப்பு

By: Published: October 23, 2017, 5:50:18 PM

பி.எஸ்.என்.எல் அதிவேக இணைப்பை சன் குழுமத்திற்கு முறைகேடாக பயன்படுத்தி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக   மாறன் சகோதரர்கள் வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்க சி.பி.ஐ தரப்பில் கூடுதல் கால அவகாசம்  கோரியதையடுத்து வழக்கை நவம்பர் 10 ஆம் தேதிக்கு சி.பி.ஐ நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, தன்னுடைய சகோதரர் நிறுவனமான சன் தொலைக்கட்சிக்கு சென்னை பி.எஸ்.என்.எல்-ன் அதிவிரைவு  தொலைபேசி இணைப்புகளை, முறைகேடாக வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்தச் சட்டவிரோத தொலைபேசி இணைப்புகள் மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக பத்திரிகையாளர் குருமூர்த்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த உச்சநீதிமன்றம் இது குறித்து விசாரணை செய்ய சிபிஐ-க்கு உத்தரவிட்டது.

அதன்படி, தயாநிதி மாறன்,  2007-ல் சென்னை பி.எஸ்.என்.எல்-ன் பொது மேலாளராக இருந்த கே.பிரம்மநாதன், அந்த நிறுவனத்தின் முன்னாள் துணைப் பொது மேலாளர் வேலுசாமி, தயாநிதி மாறனின் தனிச் செயலாளராக இருந்த கவுதமன், சன் டி.வி. ஊழியர்கள் உள்ளிட்டோர் மீது டெல்லி சிபிஐ போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்.

மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்களான சன் தொலைக்காட்சியின் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி கண்ணன், எலக்ட்ரீஷியன் ரவி, தயாநிதி மாறனின் தனிச் செயலர் கௌதமன் ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் சென்னையில் கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் கைது செய்தனர். இதையடுத்து, முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து முன் ஜாமீன் பெற்றார். 

இந்நிலையில், இந்த வழக்கில்,  சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 2016-ம் ஆண்டு டெல்லி சிபிஐ போலீஸார் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் கடந்த 2004 முதல் 2007-ம் ஆண்டு கால கட்டத்தில் மத்திய தகவல் மற்றும் தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, சென்னை பி.எஸ்.என்.எல்-ல் இருந்து, கோபாலபுரம் , போட் கிளப் சாலையில் இருக்கும் தனது வீடுகளுக்கு கேபிள் பதித்து, அதிஉயர் தொலைபேசி இணைப்புகளை கொடுத்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் இந்த இணைப்புகளை தனது சகோதரர் கலாநிதி மாறன் நடத்தி வரும் சன் தொலைக்காட்சிக்கு கொடுத்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தி உள்ளார். இதன் மூலம் அரசுக்கு 1.76 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என கூறப்பட்டிருந்தது. இதனை அடுத்து இந்த வழக்கின் விசாரணை சென்னை சி.பி.ஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.  மேலும்  இந்த வழக்கின்  குற்றப்பத்திரிகை நகல் மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேருக்கும் வழங்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி நடராஜன் முன் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தபோது, 
கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்ட 4 பேர் நேரில் ஆஜராகவில்லை ஆனால் சன் குழும தலைமை தொழில்நுட்ப அதிகாரி கண்ணன், தயாநிதி மாறன் தனிச் செயலாளர் கவுதமன், எலக்ட்ரீசியன் ரவி ஆகியோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.  மேலும் இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரி குற்றம்சாட்டபட்ட 7 பேர் தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்க கால அவகாசம் வேண்டும் என சிபிஐ தரப்பில் கோரிக்கை வைக்கபட்டது.

அதே போல நேரில் ஆஜராவதிலிருந்து நிரந்திர விலக்கு வழங்க வேண்டும் என்று கலாநதி மாறன் தரப்பில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்க சி.பி.ஐ தரப்பில் கூடுதல் கால அவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்று நீதிபதி நடராஜன் சி.பி.ஐ பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு  வழக்கின் அடுத்த விசாரணை நவம்பர் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு இன்று விசாரணைக்கு நேரில் ஆஜராகுவதிலிருந்து பி.எஸ்.என்.எல் அதிகாரிகள் வேலுச்சாமி, பிரம்மநாதன், மாறன் சகோதரர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Courts News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Illegal phone exchange case cbi court postponed to nov

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X