தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை மற்றும் புகையிலை பொருள்களை வினியோகம் செய்தவர்கள், விற்பனை செய்தவர்கள் என எத்தனை பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது? என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள “ஸ்டூடியோ 11” என்ற கடை உரிமையாளர் சரத், கடந்த ஆண்டு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தன் நிறுவனத்தின் அருகே உள்ள பெட்டி கடையில் பலர் புகைபிடித்து வருகின்றனர். இதனால் அங்கு வரும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே புகைபிடிக்க தடை விதித்து பிறப்பித்த சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, விசாரணைக்கு பிறகு நீதிபதி பல்வேறு கேள்விகளை எழுப்பினார்
தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் எப்படி தமிழகத்தில் நுழைகிறது?
கஞ்சா, புகையிலை போன்ற தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தமிழகத்தில் தயாரிக்கப்படுகிறா? அல்லது வெளிமாநிலங்களில் இருந்து வருகிறதா??
பள்ளிகளுக்கு அருகில் இருக்கும் கடைகளை 2016-ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு பிறகு எத்தனை முறை சோதனை நடத்தப்பட்டது?
தடை செய்யப்பட்ட போதைபொருட்கள் கைப்பற்றப்பட்டதா? அப்படி கைப்பற்றப்பட்ட பொருட்களின் அளவு எவ்வளவு?
கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்தவர்கள் எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்?
கஞ்சா போன்ற தடை செய்யப்பட்ட பொருள்களை வினியோகம் செய்தவர்கள், விற்பனை செய்தவர்கள் என எத்தனை பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது?
கடைகள் தவிர்த்து கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டதா?
மாணவர்களிடம் கஞ்சா புழக்கம் இருக்கிறாதா என்பதை கண்டறிய கல்வி நிறுவனங்களில் சோதனை நடத்த பட்டதா?? எத்தனை முறை நடத்தப்பட்டது?
தமிழகத்தில் கஞ்சா பொருட்கள் உற்பத்தி,விற்பனை மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து கொண்டு வருவது உள்ளிட்டவற்றை தடுக்க காவல்துறையினர் என்ன நடவடிக்கை எடுத்து வருகின்றனர்?
பொது இடங்பளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பயன்படுத்தியவர்கள்,
பொது இடத்தில் புகை பிடித்தவர்கள் என எத்தனை பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது ? எத்தனை பேர் கைது செய்யபட்டுளனர் ??
மேலும் காவல்துறையினர் தொடர்ச்சியாக சோதனைகள் நடத்தி நடவடிக்கை எடுக்கிறார்களா???
என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு தமிழக அரசு பதில் அளிக்க நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார். அதே போல தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் மாதந்தோறும் சோதனை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் விசாரணை அக்டோபர் மாதத்திற்கு தள்ளிவைத்தார்.