பப்ஜி, ஃப்ரீ பையர் போன்ற தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாவது குழந்தைகளுக்கு இடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
2020ஆம் ஆண்டு பாதுகாப்பு காரணமாக, நமது நாடு இளம் தலைமுறையினரின் முன்னேற்றத்திற்கு உளவியல் முதல் பொருளாதாரம் வரை அனைத்தும் அவசியமாக தேவைப்படுகிறது என்று மனுவில் கூறப்பட்டிருக்கிறது.
மேலும், இந்த விஷயத்தை கவனத்தில் கொண்டு பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பதிவாளர் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை உயர்நீதி மன்றம் மதுரைக்கிளையில் நிருவாக நீதிபதி மஹாதேவன், சத்யா நாராயணபிரசாத் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. விசாரித்தபின்பு பப்ஜி, ஃப்ரீ பையர் போன்ற தடைசெய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாவது குழந்தைகள் மற்றும் இளம் தலைமுறையினரிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று கூறினர்.
மேலும், "அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியை மட்டுப்படுத்த இயலாது, ஆனால் இளையோர் அவற்றை சரியாக பயன்படுத்தி கொள்ளுமாறு உறுதிப்படுத்துவது அரசின் கடமை", என்று தெரிவித்திருக்கிறார்கள்.
இதுபோன்ற ஆன்லைன் விளையாட்டுகளை இளைஞர்கள் விளையாட கூடாது என தமிழக அரசு உறுதியாக இருக்கிறது. இதற்கு உதாரணம் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ததே என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தடை செய்யப்பட்ட விளையாட்டுகள் மக்களுக்கு கிடைப்பதை தடுப்பதற்கான வழிமுறைகளை மத்திய மற்றும் மாநில அரசுகளும் வழக்கறிஞர்களும் தரவுகளுடன் அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளனர்.
இதை தொடர்ந்து, வருகின்ற அக்டோபர் 27ஆம் தேதி இந்த விசாரணையை தள்ளிவைத்திருக்கிறார்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil