ராஜிவ் கொலையாளி முருகனை சந்திக்க அனுமதிகோரி மனு

ராஜிவ் கொலையாளி முருகனை சந்திக்க அனுமதி வழங்க உத்தரவிடக் கோரி, அவரின் உறவினர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

Rajiv Gandhi - Murugan - Chennai High Court
ஜீவசமாதி அடையப்போகும் ராஜிவ் கொலை குற்றவாளி முருகனை சந்திக்க அனுமதிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி அவரது உறவினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், நளினி ஆகியோரை விடுவிக்க வேண்டுமென்ற பல தரப்பிலும் வைக்கப்பட்ட கோரிக்கை ஏற்கப்படாததால் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்துவருகின்றனர். அவர்களில் ஒருவரான முருகன், ஜீவசமாதி அடைய அனுமதி கேட்டு ஒருசில வாரங்களுக்கு முன்னர் முதலமைச்சருக்கும், சிறைத்துறை அதிகாரிகளுக்கும்  மனு அளித்திருந்தார்.
இந்நிலையில், ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் உணவு உண்ணாமலும், யாரிடமும் பேசாமலும் தியானத்தில் இருந்து வருகிறார். இதனால் அவருக்கு அளிக்கப்பட்ட சிறை சலுகைகள் ரத்து செய்யபட்டன.
இந்நிலையில் சிறையில் இருக்கும் முருகனை பார்க்க அவரது உறவினர் தேன்மொழி வேலூர் சிறைக்கு சென்றபோது, சிறை அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர். சிறை உணவை எடுத்துக்கொள்ளாதவர்களுக்கு அவர்களுக்கான சலுகைகள் நிறுத்தப்படுவதன் அடிப்படையில், பார்வையார்களை சந்திக்க அனுமதிக்க முடியாது என் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். உயிரை காப்பாற்ற வேண்டிய கடமை சிறைதுறைக்கு உள்ளது இதனை அவர்கள் செய்யவில்லை என மனுவில்ல் குத்றச்சாட்டி உள்ளார். முருகனின் உயிரை காப்பாற்றுபதற்காக என்னை அனுமதிக்க வேண்டும். என ஏ முருகனை சந்திக்க எனக்கு அனுமதியளிக்க தமிழக அரசுக்கும், சிறைத்துறைக்கும் உத்தரவிடக்கோரி தேன்மொழி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வரவுள்ளது.

Get the latest Tamil news and Courts news here. You can also read all the Courts news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Permission to meet murugan petition filed chennai high court

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com