ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளை முன்கூட்டியே விடுவிக்க முடியாது: தமிழக அரசு பதில்மனு

ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளான ராபர்ட் பயஸ், ஜெயக்குமாரை முன்கூட்டியே விடுவிக்க முடியாது என தமிழக அரசு புதிய பதில்மனு

By: Updated: August 21, 2017, 03:40:18 PM

ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளான ராபர்ட் பயஸ், ஜெயக்குமாரை முன்கூட்டியே விடுவிக்க முடியாது என தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் தெரிவித்துள்ளது.

ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயகுமார், தங்களை முன்கூட்டி விடுதலை செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2012-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் மனுதாரர்களின் கோரிக்கை தொடர்பாக பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து இந்த வழக்கில் , ராஜீவ் கொலை குற்றவாளிகள் ராபர்ட் பயாஸ், ஜெயக்குமாரை முன்கூட்டியே விடுவிக்க முடியாது. அவர்களை விடுவிக்க மாநில அரசுக்கு அதிகாரம் கிடையாது என மத்திய அரசு பதிலளித்திருந்தது.

அதே போல தமிழக அரசு கடந்த 2012-ம் ஆண்டு அரசின் அப்போதைய நிலைப்பாட்டின்படி தயாரித்த பதில் மனுவை தாக்கல் செய்தது. அதிலும் இவர்கள் இருவரையும் விடுவிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு  நீதிபதிகள் ஏ.செல்வம், பொன்.கலையரசன் முன் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,  தற்போதைய நிலைப்பாடு குறித்த புதிய பதில் மனுவை திங்கட்கிழமை தாக்கல் செய்ய இருப்பதாக தெரிவித்தார்.

அதன்படி, தமிழக அரசு தரப்பில் புதிய பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளை விடுவிப்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அவர்களை விடுவிக்க முடியாது என தமிழக அரசு மீண்டும் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு நீதிபதி செல்வம், நீதிபதி கலையரசன் அடங்கிய அமர்வு முன் நாளை விசாரணைக்கு வருகிறது,

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Courts News by following us on Twitter and Facebook

Web Title:Rajiv gandhi convicts case two lifers cant be premature release fresh counter affidavit by tn govt

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X