Chennai News Live Updates: தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை மையம்

Tamil Nadu News Update Today 10 August 2025 இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

Tamil Nadu News Update Today 10 August 2025 இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rain

Today Latest Live News Update in Tamil 6 July 2025: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

ஏரிகளின் நீர் நிலவரம்: சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் நீர் இருப்பு 55.23% ஆக உள்ளது. செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் மற்றும் கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டி.எம்.சி.யில் 6.494 டி.எம்.சி நீர் இருப்பு உள்ளது.

  • Aug 10, 2025 13:31 IST

    தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை மையம்

    ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கடலூர், அரியலூர், சிவகங்கை ஆகிய 7 மாவட்டங்களின் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது



  • Aug 10, 2025 13:15 IST

    வந்தே பாரத் ரயில் சேவைகளை தொடங்கி வைத்த மோடி

    3 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பெங்களூரு - பெலகாவி, நாக்பூர் - புனே அமிர்தசரஸ் - வைஷ்ணோ தேவி கத்ரா வழித்தடங்களில் இந்த வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது



  • Advertisment
    Advertisements
  • Aug 10, 2025 12:25 IST

    சென்னை ஆழ்வார்பேட்டையில் மழைநீர் வடிகால் பணி காரணமாக நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

    சென்னை ஆழ்வார்பேட்டையில் மழைநீர் வடிகால் பணி காரணமாக நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்துள்ளனர். ஆழ்வார்பேட்டை மேம்பாலத்தில் இருசக்கர வாகனங்கள், நான்குசக்கர வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதி. மியூசிக் அகடாமி, மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை நோக்கி வரும் மாநகரப் பேருந்துகளின் வழித்தடங்களில் மாற்றம் செய்துள்ளனர்.



  • Aug 10, 2025 12:00 IST

    தூய்மை பணியாளர்கள் போராட்டம் தொடரும்

    சென்னையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களுடன் 7வது முறையாக நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வி. தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம் திட்டமிட்டபடி தொடரும் என போராட்டக்குழு அறிவித்துள்ளது. 



  • Aug 10, 2025 11:51 IST

    12ம் வகுப்பு மாணவன் மீது கொடூரமான தாக்குதல்

    2ம் வகுப்பு மாணவன் மீது கொடூரமாக தாக்குதல் நடத்திய 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்கள். தாக்குதல் காட்சிகளை வீடியோவாகவும் பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் மாணவர்கள் பதிவேற்றிய நிலையில், அந்த வீடியோவை பார்த்த பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 



  • Aug 10, 2025 11:22 IST

    இண்டிகோ நிறுவனம் ரூ.1.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

    விமான பயணத்தில் தனக்கு அழுக்கான இருக்கை வழங்கப்பட்டதாக பயணி தொடர்ந்த வழக்கில், இண்டிகோ நிறுவனமானது ரூ.1.5 லட்சம் இழப்பீடாக வழங்க டெல்லி நுகர்வோர் ஆணையம் உத்தரவு கடந்த ஜனவரியில் புதுடெல்லிக்கு பயணிக்கும் போது, இது தொடர்பாக அளித்த புகாரையும் விமான நிறுவனம் கண்டுகொள்ளவில்லை எனவும் மனுதாரர் தெரிவிப்பு. வழக்குச் செலவாக ரூ.25,000 வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. 



  • Aug 10, 2025 11:20 IST

    வாக்கினை பதிவு செய்தார் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்

    சென்னையில் நடைபெற்று வரும் சின்னத்திரை நடிகர் சங்க தேர்தலில் தனது வாக்கினை பதிவு செய்தார் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர். 2,000 உறுப்பினர்களை கொண்ட சின்னத்திரை சங்கத்தில் 23 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. 



  • Aug 10, 2025 10:51 IST

    மாமல்லபுரம் ஆசிய அலைச்சறுக்கு போட்டியில் தமிழ்நாட்டு வீரர் வெண்கலம் வென்றார்

    மாமல்லபுரத்தில் நடந்த ஆசிய அலைச்சறுக்கு போட்டியில் தமிழ்நாட்டு வீரர் ரமேஷ் வெண்கலம் வென்றார். 12.60 புள்ளிகள் பெற்று இந்திய வீரர் ரமேஷ் வெண்கலப் பதக்கம் வென்றார். ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் முறையாக தமிழ்நாடு பதக்கம் வென்றுள்ளது.



  • Aug 10, 2025 10:20 IST

    எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை விமர்சித்து பேசிய திருமாவுக்கு ஓ.பி.எஸ் கண்டனம்

    எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை விமர்சித்து பேசிய திருமாவுக்கு ஓ.பி.எஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுகவிடம் கூடுதல் தொகுதி வாங்க திமுக தலைவரை திருமாவளவன் புகழ்ந்து பேசுவதில் தவறில்லை. மக்கள் செல்வாக்கு பெற்ற சாதி மதங்களை கடந்த மறைந்த தலைவர்கள விமர்சிப்பது நாகரிகமற்ற செயல் என்றார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா குறித்த விமர்சனத்தை திருமாவளவன் திரும்பப் பெற வேண்டும் என ஓபிஎஸ் கூறியுள்ளார்.

     

     



  • Aug 10, 2025 09:47 IST

    இந்திய விமானப் படையில் ஆட்சேர்க்கை - தாம்பரத்தில் 4 நாட்கள் நடக்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தகவல்

    அக்னிவீர் திட்டத்தில் இந்திய விமானப் படைக்கு ஆட்சேர்ப்பு வரும் செப்டம்பர் 2 முதல் 5 ஆம் தேதி வரை தாம்பரம் விமானப் படை நிலையத்தில் நடக்க உள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். பிள்ஸ் 2யில் 50% தேர்ச்சியுடன் 17 அரை முதல் 21 வயதினர் இந்த ஆட்சேர்க்கையில் பங்கேற்கலாம்

     



  • Aug 10, 2025 09:18 IST

    இந்தியாவை பகைத்ததால் பாகிஸ்தானுக்கு நஷ்டம்

    இந்தியாவை பகைத்துக்கொண்டு இரண்டு மாதங்களில் ரூ.127 கோடி வருவாயை பாகிஸ்தான் இழந்துள்ளது. இந்திய விமானங்களுக்கு வான்வெளியை மூடியதால் பாகிஸ்தானுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 



  • Aug 10, 2025 09:17 IST

    காசாவில் பரிதாபம் - உயிரிழந்த 15 வயது சிறுவன்

    காசாவில் பாராசூட் மூலம் வீசப்பட்ட உணவு பொருட்கள் வாங்க முயன்ற 15 வயது சிறுவன் உயிரிழந்தார். சோகம் இஸ்ரேலின் குண்டுகளுக்கு தப்பி நிவாரண பொருள் மேலே விழுந்ததால் உயிரிழந்தார்.



  • Aug 10, 2025 09:16 IST

    காஷ்மீருக்கு சரக்கு ரயில் சேவை

    பஞ்சாபில் இருந்து காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிக்கு முதல்முறையாக சரக்கு ரயில் இயக்கப்பட உள்ளது. ஜம்மு காஷ்மீரின் வர்த்தகம் மற்றும் தொடர்புக்கு சிறப்பான நாள் என பிரதமர் மோடிதெரிவித்துள்ளார்.



  • Aug 10, 2025 09:07 IST

    விளையாட்டு வீரர்கள் 2 ஆண்டுகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

    விளையாட்டு வீரர்கள் சிறப்பு உதவித்தொகை பெற வரும் செப்டம்பர் 8 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தேர்வாகும் வீரர்களுக்கு 2 ஆண்டுகள் உதவித்தொகை வழங்கப்படும்.

     



  • Aug 10, 2025 08:43 IST

    கர்நாடகாவில் இருமொழி கொள்கையை அமல்படுத்த மாநில அரசுக்கு பரிந்துரை

    கர்நாடகாவில் இருமொழி கொள்கையை (கன்னடம், ஆங்கிலம்) அமல்படுத்த மாநில அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கர்நாடாகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் தேசிய கல்விக் கொள்கை கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அமைக்கப்பட்ட மாநில கல்விக் கொள்கை ஆணையம் 2197 பக்கங்கள் கொண்ட அறிக்கையை முதலமைச்சர் சித்தராமையாவிடம் அளித்தது.

     



  • Aug 10, 2025 08:41 IST

    மாமல்லபுரம் வெண்ணெய் உருண்டையில் தேசியக்கொடி நிறத்தில் வண்ணம்

    சுதந்திர தினத்தை முன்னிட்டு மாமல்லபுரம் வெண்ணெய் உருண்டையில் தேசியக்கொடி நிறத்தில் வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. 



  • Aug 10, 2025 08:40 IST

    டிரம்ப் - புதின் இடையே வரும் வெள்ளிக்கிழமை பேச்சு வார்த்தை

    ரஷ்யா உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக போர் நீடித்து வரும் நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புதின் இடையே வரும் வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. அமெரிக்காவின் அலாஸ்காவில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

     



  • Aug 10, 2025 08:37 IST

    வித்தியாசமான உருவத்தில் பிறந்த ஆட்டு குட்டி

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்துள்ள சேந்தமங்கலம்பகுதியில் வினோத உருவத்தில் ஆட்டுக்குட்டி பிறந்துள்ளது. ஆடு வித்யாசமான தோற்றத்தில் இருப்பதால் ஆட்டு குட்டியை வியப்புடன் பார்த்து சென்ற கிராம மக்கள் எதுவும் அசம்பாவிதம் ஏற்படுமோ என அச்சத்தில் உள்ளனர்.



  • Aug 10, 2025 08:31 IST

    புதுச்சேரி மது பாரில் தமிழக இளைஞர் குத்திக்கொலை

    புதுச்சேரி ரெஸ்டோ பாரில் அதிகாலை தமிழக இளைஞர்கள் மது அருந்தியபோது பவுன்சர்களுடன் தகராறு ஏற்பட்ட நிலையில் இதில் பவுன்சர் ஒருவர் கத்தியால் குத்தியதில் தமிழகத்தை சேர்ந்த இளைஞர் சண்முக பிரியன் உயிரிழந்தார். பவுன்சரை கைது செய்து புதுச்சேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



  • Aug 10, 2025 08:30 IST

    பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டும் - சித்தராமையா வலியுறுத்தல்

    பாஜகவின் வாக்குகள் திருட்டு அம்பலமானதால் பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டும் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.

     



  • Aug 10, 2025 08:09 IST

    திருப்பூர் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    2 நாள் சுற்றுப்பயணமாக திருப்பூர் மாவட்டத்திற்கு ஸ்டாலின் இன்று செல்கிறார். ரூ.949 கோடியில் முடிவுற்ற 61 பணிகளை தொடங்கி வைத்து 20,000 பேருக்கு நாளை நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.

     



  • Aug 10, 2025 08:06 IST

    இன்று பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம்

    சென்னை கமலாலயத்தில் பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம் இன்று காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. பாஜக தேசிய பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ் தலைமையில் பாஜக புதிய நிர்வாகிகளோடு ஆலோசனை நடைபெற உள்ளது.

     



  • Aug 10, 2025 08:03 IST

    ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவை இன்று தொடக்கம்

    பெங்களூருவில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். பெங்களூரு ஆர்.வி.ரோடு நிலையத்தில் இருந்து பொம்மசந்திரா வரை மெட்ரோ ரயில் சேவையை இன்று தொடங்கி வைக்கிறார்.

     



  • Aug 10, 2025 07:57 IST

    "உக்ரைன் இல்லாமல் அமைதியை எட்ட முடியாது"

    உக்ரைன் இல்லாமல் டிரம்ப் - புதின் நடத்தும் பேச்சுவார்த்தை முடிவுகள் மூலம் அமைதியை எட்ட முடியாது. உக்ரைனியர்கள் தங்களது நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களுக்கு பரிசாக வழங்க மாட்டார்கள் என ஜெலன்ஸ்கி திட்டவட்டமாக கூறினார்



  • Aug 10, 2025 07:41 IST

    ரயில் டிக்கெட் கட்டணத்தில் 20% தள்ளுபடி

    பண்டிகை கால சலுகையாக ரயில் டிக்கெட் கட்டணத்தில் 20 சதவீதம் தள்ளுபடி கொடுக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தில், கட்டண சுமையை குறைக்கும் நோக்கில் ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.



  • Aug 10, 2025 07:40 IST

    தனுஷுடன் காதல்? - மிருணாள் தாகூர் விளக்கம்

    நடிகர் தனுஷும் தானும் காதலித்து வருவதாக பரவி வரும் தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த மிருணாள் தாகூர் வதந்தியை பார்த்தால் சிரிப்புதான் வருவதாகவும் கருத்து தெரிவித்துள்ளார்.



  • Aug 10, 2025 07:39 IST

    முரசொலி தொடக்க நாள் விழாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

    நெருப்பாறுகள் பல நீந்தி திமுகவின் மனசாட்சியாக தமிழ்நாட்டின் உரிமைக்குரலாக ஒலிக்கும் முரசொலிக்கு அகவை 84. அரசியலில் தெளிவு, வரலாற்றில் ஆழம், இன உணர்வில் தீரம், கலை இலக்கியத்தில் செழுமை எனச் செயல்படும் தலைவர் கலைஞரின் மூத்த பிள்ளையை வாழ்த்துகிறேன். இன்றைய செய்திகளைப் பதிவு செய்து கருத்தாழமிக்க கட்டுரைகளால் சிந்தனையூட்டி நாளைய வரலாற்றை எழுத உணர்வளிக்கும் முரசொலியின் பயணம் என்றென்றும் தொடரட்டும் என்று வாழ்த்து தெரிவித்தார்.

     



  • Aug 10, 2025 07:35 IST

    ராமதாஸ் தலைமையில் இன்று மாநாடு

    வன்னியர் சங்கத்தின் மகளிர் பெருவிழா மாநாடு பூம்புகாரில் ராமதாஸ் தலைமையில் இன்று நடைபெறுகிறது. அன்புமணி தலைமையில் பாமக பொதுக்குழு நேற்று நடைபெற்ற நிலையில் இன்று மகளிர் மாநாடு நடைபெற உள்ளது.

     



Tamilnadu News Update news updates

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: