Advertisment

பாலின மாற்று அறுவை சிகிச்சை: தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பின்னணி

ஒருவர் தான் பெண் என்பதை உணர்கிறாள், அந்த உணர்வைக் கேள்வி கேட்கும் உரிமை அரசாங்கத்திற்கும், அரசு அதிகாரிகளுக்கும் எங்கிருந்து வந்தது?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இந்திய குற்றவியல் சட்டம் 377. Tamilnadu sex Normalisation Surgeries banned by government

இந்திய குற்றவியல் சட்டம் 377. Tamilnadu sex Normalisation Surgeries banned by government

ஒருபாலுறவை குற்றமாக்கும் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 377   செல்லாது என்று உச்சநீதிமன்றம் செப்டம்பர்  6, 2018 அன்று தீர்ப்பு வழங்கியிருந்தது. பாலின சிறுபான்மையினர்( LGBT )  மத்தியில் ஒரு சுதந்திரக் காற்றை இந்த நாஸ் அறக்கட்டளை(naz foundation) வழக்கு கொண்டுவந்தது என்றே சொல்லலாம். இந்த தீர்ப்பு, உலக அளவில் பேசப்பட்டது என்றால் அது மிகையாகாது.

Advertisment

ஆனால், சமிபத்தில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி சுவாமிநாதன் முன்னிலையில் வந்த வழக்கு  நாஸ் அறக்கட்டளை வழக்கை விட ஒரு படி மேலே சென்று பாலின சிறுபான்மையினரின்( LGBT ) வாழ்வை நியாயப்படுத்தியது என்றே சொல்லலாம்.

என்ன வழக்கு:

1956 ஆம் ஆண்டு இந்து திருமணச் சட்டத்தின்படி ஒரு திருநங்கைகளை மணமகளாக கருத முடியாது என்பதை காரணமாகக் கூறி ஒரு ஆணுக்கும் ஒரு திருநங்கைக்கும்  இடையிலான திருமணத்தை பதிவு செய்ய பதிவு அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இதனை அடுத்து அந்த திருநங்கை சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளைக்கு சென்று வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் " இந்து திருமணச் சட்டத்தின்படி மணமகள் என்ற வார்த்தைக்கு அர்த்தம் திருநங்கைகளும் அடங்கும் என்று தீர்ப்பளித்தார்.

அந்த தீரிப்பில் உள்ள முக்கிய வரிகள் இங்கே:    

திருநங்கைகள் (Transwomen) என்போர் ஆணாகப் பிறந்து, பின்னர் தம்மை பெண்ணாக உணர்ந்து பெண்களாக வாழ்வோர்.பாலின அடையாளம் என்பது ஒருவரின் தனிப்பட்ட அடிப்படை உரிமை. ஒருவர் தான் பெண் என்பதை உணர்கிறாள், அந்த உணர்வைக் கேள்வி கேட்கும் உரிமை அரசாங்கத்திற்கும், அரசு அதிகாரிகளுக்கும் எங்கிருந்து வந்தது? என்ற கேள்வியையும் முன்வைத்தார்.

இதோடு, நின்று விடாமல் அந்த வழக்கு இடைப்பட்ட பாலியல் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை தடை என்ற  ஒரு முக்கியமான கேள்வியை நோக்கியும் நகர்ந்தது.

பாலினம் அடிப்படை அறிவியல்: 

xx  குரோமோசோம்களாக இருந்தால் பெண்ணாக பிறக்கும் என்றும், XY  குரோமோசோம்களாக இருந்தால் ஆணாக பிறக்கும் என்று  நமது பள்ளிகளிலும், திரைப்படங்களிலும் நாம் இந்த வார்த்தையைக் கடந்து வந்திருப்போம். இந்த அறிவியல்  கோட்பாடு எளிமையாய் இருந்தாலும், பாலினத்தைப் பற்றிய முழு உண்மையையும்  இந்த கோட்பாடால் விளக்கமுடியவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

சமிபத்தில், மரபியல் கண்டுபிடிப்புகளும், அதன்  சித்தாந்தங்களும் ஆண்/பெண் பாலின உருவாக்கம் வெறும் x/y  குரோமோசோம்களின் பங்கு மட்டும் அல்ல என்பதை உறுதி செய்துள்ளது.  மனித உடம்பில் உள்ள ஆயிரகணக்கான மரபணுக்களில் பிறழ்வுகள் அல்லது மாற்றங்கள் ஏற்ப்பட்டால் கூட , கருவில் இருக்கும் குழந்தைக்கு வெவ்வேறு வளரிச்சியை உருவாக்கி பாலின அடையாளத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.

இந்தக் கண்டுபிடிப்பால் என்ன பயன்: ஆண்/ பெண் என்ற இது வித்தியாசங்களைத் தாண்டி ஆயிர வகையான பாலின அடையாளம் நமக்கு சாத்தியம். இதன் தாக்கமாக,பிறக்கும் போதே ஆண்/பெண் அடையாளத்தையும், அதன் வேறுபாட்டையும் நம்மால் உறுதி செய்ய முடியாது . எந்த வயதிலும் ஒரு குழந்தைக்கு பாலின வேறுபாடல் ( உதரணமாக, ஆண் மற்றும் பெண் என்ற இரண்டு பிறப்புறுப்புகள் உருவாகுதல்)  ஏற்படலாம்.  இவர்களை, இடைப்பட்ட பாலினம்(இண்டர்செக்ஸ்,intersex) என்று அழைப்பார்கள்.

சுருங்க சொன்னால்,ஆயியக்கணக்கான மரபணுக்களால் உடல் ரீதியாகவும், உயிரியல் ரீதியாகவும் ஆண்/பெண் என்ற பேதைமையைத் தாண்டி வேறுபாடுகளை கொண்டவர்களை இடைப்பட்ட பாலினம் என்று சொல்லாம்.

இந்த  இடைப்பட்ட பாலினத்தை சேர்ந்தவர்கள் தன்னை பெண் என்று அடையாளம் காணலாம், ஆண் என்று அடையாளம் காணலாம். ஆண்/பெண் கலவை என்றும் (திருநங்கை/ திருநம்பி ) , ஆண்/பெண் இரண்டும் இல்லை என்றும் தங்களை அடையாளப் படுத்தலாம்/ படுத்துவார்கள். அவர்களின் பாலியல் நோக்குநிலை LGBT மற்றும் straight ஆகவும் இருக்கலாம். (அது, அவர்களது அடிப்படை உரிமை).

பாலியல் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை: ஏன்? எதற்கு? 

சமுதாய அழுத்தத்திற்கும், சட்டத்தால் அங்கீகரிக்கப் பட வேண்டும் என்ற காரணத்திற்காகவும் இந்த இடைப்பட்ட பாலினக் குழந்தைகளின் பிறப்புறுப்பை மாற்றும்(அல்லது) அகற்றும் அறுவை சிகைசையை செய்து அவர்களை ஆண் அல்லது பெண்ணாக மாற்றும் மருத்துவமுறையை முற்றிலும் ஒழிக்க வேண்டும்  இந்த வழக்கின் நீதிபது சுவாமிநாதன் அரசாங்கத்திற்கு நிர்பந்தம் விடுத்திருந்தார்.

இந்த, உயர்நீதிமன்ற நிர்பந்தத்தை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதியன்று உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகளைத் தவிர பாலியல் அடையாளத்தை மாற்றும் அறுவை சிகிச்சைகளை தமிழகம் முழுவது  தடை செய்யும் அரசாணையை வெளியிட்டிருந்தது  .

பாலியல் அடையாளத்தை மாற்றும் அறுவை சிகிச்சைக்குத் தடை விதித்ததில் இந்தியாவின் முதல் மாநிலம்  தமிழகம் தான் என்ற பெருமையும் கிடைத்துள்ளது. பாலின சமன்பாட்டில் , பாலினம் பற்றிய புரிதலில் தமிழகம் எபோதுமே முன்னோடி என்றால் அது மிகையாகது.

Lgbt
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment