சென்னை உயர் நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் இடமாற்றம்: உச்ச நீதிமன்றம் பரிந்துரை

சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி வி.எம்.வேலுமணியை இடமாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற கொலீஜியம் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்திருக்கிறது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி வி.எம்.வேலுமணியை இடமாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற கொலீஜியம் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்திருக்கிறது.

author-image
WebDesk
New Update
சென்னை உயர் நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் இடமாற்றம்: உச்ச நீதிமன்றம் பரிந்துரை

சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி வி.எம்.வேலுமணியை இடமாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற கொலீஜியம் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்திருக்கிறது.

Advertisment

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் நேற்று கொலீஜியம் கூடியது.

publive-image

சென்னை உயர் நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவியில் இருக்கும் டி.ராஜாவை ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்து இடம் மாற்றவும், நீதிபதி வி.எம்.வேலுமணியை கொல்கத்தா உயர் நீதிமன்றத்து இடமாற்றம் செய்யவும் உச்ச நீதிமன்றத்தின் கொலீஜியம் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்தது.

Advertisment
Advertisements

இதை தொடர்ந்து, ஆந்திர உயர் நீதிமன்றத்தின் நீதிபதி பட்டு தேவானந்த் மற்றும் தெலங்கானா உயர் நீதிமன்றத்தின் நீதிபதி டி.நாகார்ஜுன் ஆகியவர்களை, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்ய உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவியில் இருக்கும் டி.ராஜா அடுத்த ஆண்டு ஓய்வு பெறுகிறார். இந்நிலையில், அவரது ஒப்புதல் இல்லாமல் ராஜஸ்தானுக்கு இடமாற்றம் செய்யக் கூடாது என சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தினர் கூறி தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Chennai Chennai High Court High Court Madras High Court

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: