scorecardresearch

மலைப் பகுதிகளில் டாஸ்மாக் மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம்: அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு

இந்த திட்டத்தை கோவை, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மலைப் பகுதிகளில் டாஸ்மாக் மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம்: அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு

தமிழ்நாடு அரசு மலைப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில், காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் அமல்படுத்தியதற்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்தது. 

இந்த திட்டத்தை கோவை, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் திரும்பப் பெறப்படும் பாட்டில்கள் மூலம் கிடைத்த வருவாய் விவரங்களை டாஸ்மாக் நிர்வாகம் தாக்கல் செய்யவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கோயம்பத்தூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ஏப்ரல் 1ம் தேதி முதல் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை அமல்படுத்த டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் வழக்கு விசாரணை ஏப்ரல் 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest Courts news download Indian Express Tamil App.

Web Title: Tamil nadu government scheme to take back empty liquor bottles in tasmac shops