கோவை கோட்ட அரசுப் போக்குவரத்து கழகத்தின் உக்கடம்-1 கிளை பணிமனையில் 25-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தொழில்நுட்ப பயிற்சிக்காக வந்துள்ளனர். இவர்களுக்கு பேருந்துகளின் பராமரிப்பில் பழுது நீக்கம், உதிரி பாகங்களை மாற்றி அமைத்தல், பேருந்துகளின் இன்ஜினில் உள்ள பழுதுகளை நீக்குவது குறித்தும், அவற்றின் தன்மை செயல்திறன் குறித்து பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
ஆனால் இவ்வாறு பயிற்சி பெற வேண்டிய மாணவர்களுக்கு கழிவறையில் வெள்ளை அடித்தல், சுத்தம் செய்தல், அதிகாரிகளின் அறைகளை சுத்தம் செய்தல், உள்ளிட்ட பணிகள் வழங்கப்பட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில், மாணவன் ஒருவன் கழிவறைக்கு வெள்ளை அடிக்கும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. வீடியோ வெளியான விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுபோன்ற பணிகளில் மாணவர்கள் ஈடுபடுத்தக் கூடாது என்று அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.