கோயம்புத்தூர் மாவட்டம் வடமதுரையில் இருந்து தடாகம் செல்லும் தாளியூர் பன்னிமடை சாலையில் இரவு நேரத்தில் காட்டு யானை குட்டிகளுடன் கூட்டமாக சாலையில் நின்றதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.
இதனால் அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகளும் அச்சமடைந்து இரவு நேரத்தில் வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் சூழல் உருவானது.
இதேபோன்று தொடர்ந்து அப்பகுதியில் இரவு நேரத்தில் தோட்டத்து வீடுகளில் புகுந்து உணவு தேடி கால்நடைக்கு வைத்து இருக்கும், உணவுகளை உண்டு, தோட்டங்களில் பயிரிடப்பட்டு உள்ள பயிர்களை சேதத்தை ஏற்படுத்துவதால் வனத் துறையினர் அப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டு யானைகளை வனப் பகுதியில் இருந்து வெளியே வராமல் கண்காணிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் அந்த வழியாக வந்த நபர் ஒருவர் தனது செல்போனில் யானைகள் வரும் காட்சிகளை பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டது தற்போது அந்தக் காட்சிகள் வைரலாக பரவி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“