scorecardresearch

காட்டுக்குள் மாயமான நலிவுற்ற யானை 12 நாள்களுக்கு பின் சிக்கியது.. மீட்புப் பணி தீவிரம்

கோவையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு சுற்றி திரிந்த யானை 12 நாள்களுக்குப் பின்பு கண்டறியப்பட்டுள்ளது.

covai elephant trapped in the forest after 12 days Rescue work is intense
கோவை நலிவுற்ற யானையை மீட்கும் பணிகள் தீவிரம்

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே உடல்நலம் பாதிக்கப்பட்ட யானை மாயமான நிலையில் 12 நாள்களுக்குப் பிறகு கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாடு-கேரள எல்லையான கோபனாரி பகுதியில் உள்ள ஆற்றுப்படுகையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி வாயில் காயத்துடன் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் ஆண் காட்டு யானை சுற்றித்திரிவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இந்தத் தகவலின் அடிப்படையில், அந்த யானையை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். அப்போது யானை திடீரென வனப்பகுதிக்குள் மாயமானது. இதனையடுத்து மாயமான காட்டு யானையை தமிழ்நாடு மற்றும் கேரளா வனத்துறையினர் தேடி வந்தனர்.

இந்த நிலையில், தமிழ்நாட்டின் வனப்பகுதியான செங்குட்டை என்ற இடத்தில் கடந்த 17ஆம் தேதி யானை கண்டுபிடிக்கப்பட்டது. அப்போதும், மாயமானது. இதனையடுத்து கோவை செங்குட்டை, ஊக்கயனூர், பனப்பள்ளி மற்றும் சீங்குழி பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட வனத்துறையினர் யானையை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்றிரவு ஆகஸ்ட் 28ஆம் தேதி பனப்பள்ளி பழங்குடியின கிராமம் அருகே யானை ஒன்று நிற்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அங்கு விரைந்த வனத்துறையினர் அந்த யானை உடல்நலம் பாதிக்கப்பட்ட யானை என்பதை உறுதி செய்தனர்.

இதனைத்தொடர்ந்து உயர் அலுவலர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு, இன்று (திங்கள்கிழமை) காலை முதல் அந்த யானையை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். கால்நடை மருத்துவர்கள் ஆனைகட்டிக்கு விரைந்துள்ளனர்.

செய்தியாளர் பி. ரஹ்மான்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Covai elephant trapped in the forest after 12 days rescue work is intense

Best of Express