தமிழர்களின் பாரம்பரியத்தையும், வீரத்தையும் பறைசாற்றும் விதமாக, ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக கோவையில் ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி கோவையில் ஜல்லிக்கட்டு நடக்கிறது. கோவை மாவட்டம் செட்டிபாளையம் பகுதியில், 3 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை, தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவங்கி வைக்கிறார்.
தமிழர் பண்பாட்டு ஜல்லிக்கட்டு பேரவையின் கோவை மாவட்ட தலைவரும் திமுக தெற்கு மாவட்ட செயலாளருமான தளபதி முருகேசன், துணைத்தலைவர் விஸ்வநாதன், பேரவை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் நேரில் சென்று, கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களிடம், கோவை ஜல்லிக்கட்டுக்கான முதல் அழைப்பிதழை வழங்கினர்.
கோவையில் பிரம்மாண்டமான ஏற்பாட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறும் நிலையில், இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கான பணிகள் தற்பொழுது ஆரம்பித்து தீவிரமடைந்திருக்கின்றன . மதுரை, தேனி, விருதுநகர், திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கோவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 800-க்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் 500"க்கும் மேற்பட்ட காளையர்கள் பங்கு பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றன.
இதில் வெற்றி பெறுவோருக்கு தங்க காசு, வெள்ளி காசு, உள்ளிட்டு ஏராளமான பரிசுகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றன. கோவையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்கு காளை உரிமையாளர்களும், காளையர்களும் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்