Advertisment

Coimbatore, Madurai, Trichy News: மதுரை காமராஜர் பல்கலை. துணைவேந்தர் விவகாரம்: ஆளுநர் மீண்டும் குற்றச்சாட்டு

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Governor RN Ravi xyz
  • Jan 31, 2025 00:05 IST

    லாரியில் வெடித்து சிதறிய சிலிண்டர்: இளைஞர் காயம்

    சேலம்: கொங்கணாபுரம் அருகே, லாரியில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. சாலை பணியின் போது லாரியில் தீ பிடித்து கேஸ் சிலிண்டர் வெடித்ததால் மாதவன் என்ற இளைஞர் காயமடைந்தார்.



  • Jan 30, 2025 20:42 IST

    திருவண்ணாமலை கோவிலில் மார்கழி மாதம் ரூ3.45 உண்டியல் காணிக்கை

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், மார்கழி மாத பவுர்ணமி உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில், ரூ3.45 ரொக்கமும், 112 கிராம் தங்கம், 1.960 கிராம் வெள்ளியும் கிடைத்துள்ளது.



  • Advertisment
  • Jan 30, 2025 20:40 IST

    லஞ்சம் வாங்கிய போலீஸ் எஸ்.ஐ. கைது!

    மதுரை: குற்ற வழக்கில் கைது நடவடிக்கை மேற்கொள்ள புகார்தாரரிடம் ரூ70,000 லஞ்சம் கேட்டு, முதற்கட்டமாக ரூ30,000 வாங்கிய ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலைய எஸ்.ஐ., சண்முகநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். புதுர் பேருந்து நிலையம் அருகே ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை சண்முகநாதன் லஞ்சமாக வாங்கும் போது, லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்



  • Jan 30, 2025 20:35 IST

    மதுரை காமராஜர் பல்கலை. துணைவேந்தர் விவகாரம்: ஆளுநர் மீண்டும் குற்றச்சாட்டு

    மதுரை காமராஜர் பல்கலை. துணைவேந்தரை தேர்வு செய்வதற்காக புதிய தேடுதல் குழுவை அரசு நியமிக்க வேண்டும். துணைவேந்தர் நியமனத்தில் வேண்டுமென்றே யுஜிசி உறுப்பினரை தவிர்த்து தேடுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவில் யுஜிசி பிரதிநிதியை சேர்க்காதது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது. யுஜிசி பிரதிநிதியை உள்ளடக்கிய தேடுதல் குழுவை நியமித்து, புதிய அரசாணையை வெளியிட வேண்டும் என ஆளுநர் ஆர்.என் ரவி கூறியுள்ளார்.



  • Advertisment
    Advertisement
  • Jan 30, 2025 20:33 IST

    'ஸ்குயிட் கேம்' தொடரின் 3வது சீசன் ரிலீஸ் தேதி அறிவிப்பு

     உலகம் முழுவதும் ஹிட் அடித்த 'ஸ்குயிட் கேம்' தொடரின் 3வது சீசன் வரும் ஜூன் மாதம் 27ம் தேதி வெளியாகும் என நெட்ப்ளிக்ஸ் அறிவித்துள்ளது



  • Jan 30, 2025 19:04 IST

    தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதால் டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்படவில்லை - அண்ணாமலை

    தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதால் டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்படவில்லை. மாநில அரசின் மிரட்டல்களுக்கு எல்லாம் பிரதமர் மோடி அஞ்ச மாட்டார், மக்களுக்காகவே டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்பட்டது. தமிழக மக்கள் பக்கம் இருக்கிறேன் என்பதை பிரதமர் மோடி மீண்டும் நிரூபித்துள்ளார். இங்குள்ள விவசாய பகுதிகளை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாநில அரசு அறிவிக்க வேண்டும் என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்



  • Jan 30, 2025 18:38 IST

    பாலியல் வழக்கு – குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

    வேலூரில் கடந்த 2022ம் ஆண்டு பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூர் மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்



  • Jan 30, 2025 17:40 IST

    ஜெகபர் அலி கொலை விவகாரம்; கனிம வள உதவி இயக்குநர் மீது நடவடிக்கை

    புதுக்கோட்டை மாவட்ட கனிம வள உதவி இயக்குனர் லலிதா காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். ஜெகபர் அலி கொலையில் குற்றச்சாட்டுக்கு உள்ளான கல்குவாரி உரிமம் இன்றி செயல்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



  • Jan 30, 2025 17:08 IST

    வேங்கைவயலில் சடலத்துடன் போராட்டம்

    புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் சம்பவத்தில் முதல் குற்றவாளியான காவலர் முரளி ராஜாவின் பாட்டி இன்று உயிரிழந்தார். மூதாட்டியின் இறுதிசடங்கிற்கு வெளியூரில் உள்ள உறவினர்கள் யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை என கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்



  • Jan 30, 2025 16:52 IST

    மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி மதுரை வருகை; உற்சாக வரவேற்பு

    மதுரை மேலூர் அ.வல்லாளப்பட்டி   யில் மத்திய கனிம வள அமைச்சர் கிஷன் ரெட்டி மற்றும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை வருகை; அவர்களுக்கு பா.ஜ.க-வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.



  • Jan 30, 2025 16:37 IST

    ஜெகபர் அலி உடலை தோண்டி எடுக்க ஐகோர்ட் உத்தரவு

    சமூக ஆர்வலர் ஜெகபர் அலியின் உடலை தோண்டி எடுக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.  திருமயம் தாசில்தார் முன்னிலையில், போதிய காவல்துறை பாதுகாப்புடன் எக்ஸ்ரே எடுக்க வேண்டும். சமூக ஆர்வலர் ஜெகபர் அலியின் உடலை தோண்டி, புதைத்த இடத்திலேயே எக்ஸ்ரே எடுக்க மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. 



  • Jan 30, 2025 15:37 IST

    நெல்லையில் தடுப்பூசி செலுத்தியதால் 45 நாள் குழந்தை மரணம் - உறவினர்கள் குற்றச்சாட்டு

    நெல்லையில் பிறந்து 45 நாட்களே ஆன ஆண் குழந்தைக்கு தடுப்பூசி செலுத்தியதால்உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டியுள்ளனர். நேற்று தடுப்பூசி செலுத்திய நிலையில் இன்று காலையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தது.



  • Jan 30, 2025 15:34 IST

    விழுப்புரம் பேருந்து நிலையம் அருகே ரூ.1.60 கோடி பணத்துடன் பிடிபட்ட 4 பேர்; போலீஸ் விசாரணை

    விழுப்புரம் பேருந்து நிலையம் அருகே ரூ.1.60 கோடி பணத்துடன் பிடிபட்ட நால்வரிடம் பணத்தை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான திருச்சியைச் சேர்ந்த முகமது ரியாஸ், சிராஜிதியூன், சித்திக் மற்றும் ராஜ் முகமது ஆகிய 4 பேரும் சென்னை பிராட்வேயில் பணத்தைப் பெற்று கொண்டு செல்லும் வழியில் சிக்கியுள்ளனர். யாருக்கு பணம் எடுத்துச் செல்லப்பட்டது என்பது குறித்தும் விசாரணை. பணத்தை வருமான வரித்துறையிடம் ஒப்படைக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.



  • Jan 30, 2025 15:24 IST

    திருவாரூரில் சாதி சான்றிதழ் கேட்டு ஆதியன் பழங்குடியின மக்கள், மாணவர்கள் 4வது நாள் போராட்டம் 

    திருவாரூர் மாவட்டத்தில் சாதி சான்றிதழ் கேட்டு அதியன் பழங்குடியின மக்கள் மற்றும் மாணவர்கள் 4வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், ஆதார் கார்டு, ரேஷன் காருடு உள்ளிட்ட ஆவணங்களை மன்னார்குடி கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.



  • Jan 30, 2025 15:03 IST

    முற்றுகையிட்டு போராட்டம்

    நீலகிரி மாவட்டம் கல்லெட்டி மலைப்பாதையில் வெளிமாநில சுற்றுலா வாகனங்கள் செல்ல, வனத்துறையினர் திடீரென அனுமதி மறுத்து, கூடலூர் வழியாக ஊட்டிக்கு செல்ல அறிவுறுதியுள்ளனர். இதனைக் கண்டித்து நூற்றுக்கணக்கானோர் வனத்துறை சோதனைச் சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி  வருகிறார்கள். இதனால், தெப்பக்காடு - மசினக்குடி - கல்லட்டி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  



  • Jan 30, 2025 14:57 IST

    புதுக்கோட்டை: சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே எள் ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம், டயர் வெடித்ததால் சாலையோரம் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரியை ஓட்டி வந்த தஞ்சாவூரைச் சேர்ந்த ராஜகணபதி நல்வாய்ப்பாக காயமின்றி உயிர் தப்பினார்.



  • Jan 30, 2025 14:43 IST

    ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பு

    போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதி தேனியில் வரும் பிப்.2 ஆம் தேதி நடைபெறவிருந்த ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிக்கு மாவட்ட காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. 



  • Jan 30, 2025 14:37 IST

    பல்லடம் பகுதியில் மதுபோதையில் தாக்குதல் நடத்திய மூவர் கைது

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் சமோசா விற்று வந்த பீகாரைச் சேர்ந்த ஷாம் குமார் (26) என்பவர் மீது மதுபோதையில் தாக்குதல் நடத்திய ஜெயபாண்டியன், முத்து ஈஸ்வரன் மற்றும் யுவராஜ் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர். மேலும் மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.



  • Jan 30, 2025 13:35 IST

    மதுரையில் போராட்டம்  -  ஆர்.பி உதயகுமார் கைது

    மதுரை தேசியநெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருமங்கலம் - ராஜபாளையம் நான்கு வழிச்சாலை பணியால் விபத்து ஏற்படுவதாக சுரங்கப்பாதை வசதி கோரி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 



  • Jan 30, 2025 12:51 IST

    சேலத்தில் அறக்கட்டளை என்ற பெயரில் பண மோசடி

    சேலத்தில் அறக்கட்டளை என்ற பெயரில் பொதுமக்களிடம் இருந்து சட்டவிரோதமாக பண முதலீடுகள் பெற்று மோசடி செய்த விவகாரம் - சோதனையில் கைப்பற்றப்பட்ட ₹500 கோடி பணம், 2.5 கிலோ தங்கம், 13 கிலோ வெள்ளிப் பொருட்கள் வங்கி லாக்கருக்கு மாற்றப்பட்டுள்ளது. சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில், பாதுகாப்பு கருதி கோட்டை பகுதியில் உள்ள ஸ்டேட் வங்கியின் லாக்கரில் வைக்கப்பட்டது. 



  • Jan 30, 2025 12:39 IST

    260 குடும்பங்களுக்கு வந்த நோட்டீஸ் - அதிர்ச்சியில் மக்கள்

    தென்காசியில், கோவில் நிலத்தில் குடியிருப்போர் 16 கோடி ரூபாய் வரி பாக்கி செலுத்த வேண்டுமென வந்த நோட்டீஸால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். சில்லரைப்புரவு ஊராட்சியில், திருமலை குமார சுவாமி கோவிலுக்கு சொந்தமான 53 ஏக்கர் நிலத்தில், 260-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தோர் வசித்து வருகின்றனர். ஒவ்வொரு குடும்பத்தினரும் தலா 6 லட்ச ரூபாய் வரி பாக்கி செலுத்த வேண்டுமென கூறி கோயில் நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனையடுத்து, நோட்டீஸை திரும்பப் பெறக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு அளித்தனர்.



  • Jan 30, 2025 12:13 IST

    சாதி சான்றிதழ் வழங்க கோரி மீண்டும் போராட்டம்.

    பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பட்டியலின மக்கள் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சாதி சான்றிதழ் இல்லாததால் தங்களின் பிள்ளைகளின் படிப்பில் சிக்கல் என்று தங்களது வேதனையை தெரிவித்துள்ளனர். 



  • Jan 30, 2025 11:59 IST

    அரிசி சாப்பிட்டதால் 11 வயது சிறுமி அகால மரணம்

    தூத்துக்குடியில் 6ஆம் வகுப்பு பள்ளி மாணவி அரிசி சாப்பிட்டதால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் பகுதியைச் சேர்ந்த ராமசாமி என்பவரது மகள் மாலதி, ஆறாம் வகுப்பு படித்து வந்த நிலையில், வழக்கம் போல மாணவி பள்ளி முடிந்து வீடு திரும்பியபோது திடிரென மயங்கி விழுந்துள்ளர். உடனடியாக பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், பரிசோதனையில் சிறுமி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறப்பட்டது. அதிகபடியான அரிசி சாப்பிட்டதால் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிர் பிரிந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.



  • Jan 30, 2025 11:41 IST

    நீலகிரி ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

    நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் தடை உத்தரவை அமல்படுத்தியது தொடர்பாக, பொய்யான அறிக்கை தாக்கல் செய்ததாக ஆட்சியர் லட்சுமி பவ்யாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. விசாரணையின் போது பிளாஸ்டிக் தடை உத்தரவு, தானியங்கி குடிநீர் மையங்கள் அமைத்தது தொடர்பாக நீலகிரி ஆட்சியர் தரப்பில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, எந்த மையங்களும் செயல்படவில்லை என கூறிய நீதிபதிகள், ஆட்சியர் தவறான அறிக்கையை தாக்கல் செய்ததாக கண்டனம் தெரிவித்தனர். தொடர்ந்து, முறையான அறிக்கையை சமர்பிக்க ஆட்சியருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஒத்திவைத்தனர்.



  • Jan 30, 2025 11:38 IST

    மன்னிப்பு கேட்ட மாணவிக்கு முத்தம் கொடுத்த இளைஞர் கைது

    கோவையில் ஸ்கூட்டர் மீது மோதியதற்கு மன்னிப்பு கேட்ட மாணவிக்கு முத்தம் கொடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். பாலக்காடு சாலையில் கல்லூரி மாணவி பயணித்த ஸ்கூட்டர் முகமது ஷெரீப் என்ற இளைஞரின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. அந்த மாணவி மன்னிப்பு கேட்ட நிலையில் துரத்தி சென்று முத்தம் கொடுத்துள்ளார். குனியமுத்தூர் காவல் நிலையத்தில் அந்த மாணவி புகார் அளித்துள்ள நிலையில் குற்றவாளி ஷெரீப் கைதுசெய்யப்பட்டுள்ளார். 



  • Jan 30, 2025 11:29 IST

    திருமங்கலத்தில் 3 மணி நேரமாக தொடரும் சாலை மறியல்

    சுரங்கப்பாதை வசதி கோரி திருமங்கலம்-ராஜபாளையம் சாலையில் ஆலம்பட்டி கிராம மக்கள் மூன்று மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியலில் ஈடுபட்டுள்ளன. 4 வழிச்சாலை பணிகளால் உரிய பாதை வசதியில்லை என்று குற்றசாட்டை எழுப்பியுள்ளனர். இதனால் சாலையின் மறுபக்கம் உள்ள ரேஷன் கடை மற்றும் பள்ளிக்கு செல்ல முஐடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திருமங்கள கோட்டாட்சியர், வட்டாட்சியர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். 



  • Jan 30, 2025 10:58 IST

    வயதான தம்பதி விபரீத முடிவு!

    மயிலாடுதுறை நீடுர் பகுதியில் கவனிக்க ஆள் இல்லாததால் எரிவாயு சிலிண்டரை வெடிக்க வைத்து வயதான தம்பதி தற்கொலை முயற்சி. மனைவி செந்தாமரை உயிரிழந்த நிலையில் கணவர் இளங்கோவன் 100% தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  



  • Jan 30, 2025 10:56 IST

    போலியான போக்சோ வழக்கு - சிறை தண்டனை ரத்து

    பொய்யான பாலியல் புகாரில் போக்சோ நீதிமன்றம் விதித்த 10 ஆண்டு சிறைத் தண்டனையை ரத்து செய்த உயர்நீதிமன்றம். பாலியல் பலாத்காரம் செய்ததற்கான எந்த ஆராதரங்களும் இல்லை என மருத்துவ பரிசோதனையில் தெரியவந்ததையடுத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 



  • Jan 30, 2025 10:28 IST

    வேங்கைவயலில் போலீசார் குவிப்பு

    புதுக்கோட்டை மாவட்டம் சிபிசிஐடி அலுவலகம், பழைய பேருந்து நிலையத்தில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளியாக அறிவித்த சிபிசிஐடியை கண்டித்த தமிழக மக்கள் புரட்சி கழகத்தினர் உண்ணாவிரதத்தால் பரபரப்பு ஏற்பட்டது. 



  • Jan 30, 2025 10:26 IST

    சுரங்கப்பாதை வசதி கோரி ஆலம்பட்டி கிராம மக்கள் சாலை மறியல்

    சுரங்கப்பாதை வசதி கோரி மதுரை திருமங்கலம் பகுதியில் ஆலம்பட்டி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.



  • Jan 30, 2025 09:29 IST

    அதிகளவு அரிசி சாப்பிட்டதால் மாணவி உயிரிழப்பு!

    தூத்துக்குடி ஒட்டப்பிடாரம் அருகே அதிகளவு அரிசி சாப்பிட்டதால் 6 ஆம் வகுப்பு மாணவி மாலதி மூச்சுத் திணறி உயிரிழப்பு. ஆதனூரில் பள்ளி சென்றுவிட்டு வீடு திரும்பிய மாணவி மாலதி மயங்கி விழுந்த உயிரிழந்தார். மாணவி அதிகளவு அரிசி சாப்பிட்டதால் இறந்ததாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.



  • Jan 30, 2025 09:17 IST

    சென்னை திரும்பிய ராமேஸ்வரம் மீனவர்கள்

    இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட, ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். கடந்த 12ம் தேதி மீன் பிடிக்கச் சென்றபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இந்திய தூதரக அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து விடுவிக்கப்பட்டனர். தற்போது தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள், சென்னை விமான நிலையத்தில் மீனவர்களை வரவேற்று, தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்த வாகனத்தில் ராமேஸ்வரம் அனுப்பி வைத்தனர்.



  • Jan 30, 2025 09:17 IST

    ஏரியில் மிதந்த சிலிண்டர்

    செங்கல்பட்டு மாவட்டம் படாளம் பகுதியில் இருந்து 357 சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லாரி செய்யாறு அருகே சாலையின் தடுப்பை உடைத்துக் கொண்டு ஏரியில் கவிழ்ந்த விபத்து. லாரி ஓட்டுநர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி! ஏரியில் மிதந்து வந்த கேஸ் சிலிண்டர்களை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.



  • Jan 30, 2025 09:16 IST

    முன்னாள் ராணுவ வீரர் கைது

    தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இளம்பெண் குளிப்பதை செல்போனில் படம் எடுத்த பாஜக நிர்வாகி குமார் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் முன்னாள் ராணுவ வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.



  • Jan 30, 2025 09:14 IST

    மதுரையில் மத்திய அமைச்சருக்கு பாராட்டு விழா!

    டங்ஸ்டன் திட்டம் ரத்து தொடர்பாக மதுரை மாவட்டம் அ.வள்ளாலப்பட்டியில் இன்று மாலை மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி மற்றும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலிக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது.



Tamil News Live Update news updates
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment