புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படும் வகையிலும் புற்றுநோயாளிகளின் சிகிச்சைக்கான நிதி திரட்டும் நோக்கிலும் நடத்தப்படும் கோவை மாரத்தான் ஓட்டத்தில் உலகம் முழுவதிலும் இருந்து 21,000-க்கும் அதிகமான ஓட்டப்பந்தய வீரர்கள் பங்கேற்க உள்ளதாக டாக்டர் பாலாஜி கூறினார்.
4 பிரிவுகளாக நடைபெறும் இந்த மாரத்தான் போட்டியானது. 21.1 கிலோமீட்டர் ஓட்டம், 10 கிலோமீட்டர் ஓட்டம், 5 கிலோமீட்டர் ஓட்டம் மற்றும் கார்ப்ரேட் நிறுவங்களுக்கான ரிலே ஓட்டம் என நான்கு வகைகளில் நடைபெற உள்ளது.
புற்றுநோயாளிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் கோயம்புத்தூர் புற்றுநோய் அறக்கட்டளை சார்பில் ஆண்டு தோறும் நிதி திரட்டுவதற்க்காக இந்த மாரத்தான் நடத்தப்படும் இந்த மாரத்தான் ஓட்டப்பந்தயத்தை தமிழ்நாடு தடகள சங்கம் அங்கீகரித்துள்ளது.
இந்த நிலையில் இந்த ஓட்ட பந்தயத்திற்கான டி-ஷர்ட் மற்றும் பதக்கங்கள் வெளியீட்டு விழா கோவை தனியார் வணிக வளாகத்தில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்,. கோயம்பத்தூர் கேன்சர் பவுண்டேசன் அமைப்பின் நிர்வாக அறங்காவலர் டாக்டர்.பாலாஜி, எல்.ஜி. எக்யூப்மென்ட்ஸ் லிமிடெட் நிர்வாக இயக்குனர் ஜெய்ராம் வரதராஜ், வாக்கரூ இயக்குனர் ராஜேஷ் குரியன் மற்றும் கோயம்புத்தூர் மாரத்தான் 2024 பந்தய இயக்குனர் ரமேஷ் பொன்னுசாமி ஆகியோர் டி-சர்ட் மற்றும் பதக்கங்களை அறிமுகப்படுத்தினர்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் பாலாஜி கூறுகையில், 12 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மாரத்தான் போட்டியை தொடங்கும் போது இந்த மாரத்தான் போட்டி இன்று இருக்கும் அளவுக்கு வளரும் என்று நாங்கள் நினைத்ததில்லை என்று கூறினார்.
கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகர காவல்துறைக்கு தனது நன்றியைத் தெரிவித்த டாக்டர் பாலாஜி, “
இந்த மாரத்தான் போட்டியின் மூலம் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதாகவும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆதரவாக 12 ஆண்டுகளில் ரூ.5 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும், “கடந்த ஆண்டு 18,600 பேர் பங்கேற்றதாகவும் இந்த ஆண்டு 19 மாநிலங்களில் இருந்து 21,000-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் பங்கேற்க உள்ளதாகவும் இந்த ஆண்டு 13 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் இந்த நிகழ்வில் பங்கேற்க பதிவு செய்த மொத்த நபர்களில் 4,500 பேர் பெண்கள் இடம்பெற்று உள்ளார்கள்” என்று டாக்டர் பாலாஜி தெரிவித்தார்.
செய்தி: பி. ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“