கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோவை தொண்டாமுத்தூர், பேரூர், மதுக்கரை, வாளையார் , வாலாங்குளம், பெரியகுளம், குறிச்சி குளம் போன்ற குளங்கள் பனி மூட்டத்தால் ரம்மியமாக காட்சி அளித்தன.
கோவை மாவட்டத்தில் இன்று கன மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது. குறிப்பாக இந்த மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு முதலே நகரின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. மேலும் அதிகாலை இருந்து நகரின் பல்வேறு பகுதிகளில் பனி மூட்டம் காணப்பட்டது.
கோவை புறநகர் பகுதிகளான தொண்டாமுத்தூர், பேரூர், மதுக்கரை, வாளையார் , வாலாங்குளம், பெரியகுளம், குறிச்சி குளம் போன்ற குளங்கள் பனி மூட்டத்தால் ரம்மியமாக காட்சி அளித்தன.
உக்கடம், செல்லபுரம், இராமநாதபுரம், பீளமேடு, மசக்காளி பாளையம் உட்பட நகரின் பெரும்பாலான பகுதிகளில் அதிகாலை நேரத்தில் பனி மூட்டம் நிலவியதால் இதமான சூழல் ஏற்பட்டது.
இதனால் மருதமலை சுப்பிரமணி சாமி திருக்கோவில் முழுவதும் பனிமூட்டம் சூழ்ந்து காட்சி அளித்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“