கோவை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பவன் குமார் கிரியபனவர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். மாவட்டத்தின் ஆட்சியராக இருந்த கிராந்திக்குமார் பாடி பொறுப்புக்களை ஒப்படைத்த பின்பு பவன் குமார் கோப்புகளில் கையெழுத்திட்டு பதவி ஏற்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த புதிய மாவட்ட ஆட்சியர் பவன் குமார்,
மக்கள் பணியாற்றுவதற்காக முக்கிய பொறுப்பில் இருப்பதாகவும் அரசின் அனைத்து திட்டங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு தனிகவனம் கொடுக்கப்படும் எனவும் கோவை மாவட்டத்தில் பல்வேறு என் ஜி ஓக்கள் இருப்பதை குறிப்பிட்ட அவர் அவர்களுடன் இணைந்து வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தார்.
கனிமவள கொள்ளை குறித்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்