கோவை அண்ணாசிலை பகுதியில் எந்த ஒரு அமைப்பு, இயக்கம், கட்சிகளில் பெயரை குறிப்பிடாமல் தமிழ்நாடு வரைப்படத்தை கருப்பில் வரைந்து அதன் முன்பு ஊரின் பெயர் பலகையில் தமிழ் வாழ்க என்றும் அதன் கீழ் இந்தியில் கருப்பு மையிட்டு அழித்தவாறும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
இன்று உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு அந்தந்த மாநிலங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் அரசு சார்ந்து நடத்தப்படுகின்றன.
/indian-express-tamil/media/media_files/2025/02/21/6N7Z9iyWOrtt1i0jDvrx.jpg)
இந்நிலையில் தமிழகத்தில் தற்போது இந்தி திணிப்பை பல்வேறு அமைப்பினர் எதிர்த்து வரும் நிலையில் அதனை குறிக்கின்ற வகையில் கோவையில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.