கோவை (தனியார்) பி.எஸ்.ஜி.ஆர்.கிருஷ்ணம்மாள் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 2732 மாணவிகள் பட்டங்கள் பெற்றனர்.
கல்லூரியின் தலைவர் டாக்டர் நந்தினி ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக, தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் K.அழகுசுந்தரம் கலந்து கொண்டு தலைமையுரையாற்றினார்.
அப்போது மாணவியர்களின் மத்தியில் பேசிய அவர், நவீன தொழில் நுட்பங்களை மாணவிகள் ஆர்வமுடன் கற்று கொள்ள வேண்டும் என்று கூறினார். ”பட்டப்படிப்புகளை முடித்து செல்லும் மாணவிகள் தங்களது இலட்சியத்தை அடைய கடுமையாக உழைக்க வேண்டும், உழைப்பு மட்டுமே வெற்றியை தரும்” என்றும் கூறினார்.
அவர் உழைப்பால் உயர்ந்த பெண்களின் வரலாறு அதிகம் என சுட்டி காட்டி பெண்கள் தன்னம்பிக்கையோடு வாழ்வியலில் முன்னேற வேண்டும் என்று பேசினார்.
தொடர்ந்து 2020- 21 ஆம் ஆண்டிற்கான இளங்கலை மற்றும் முதுகலை படிப்பில் ரேங்க் பெற்ற 48 மாணவிகள் மற்றும் 2732 பேருக்கு பட்ட சான்றிதழ்களை வழங்கினார்.
பட்டமளிப்பு விழாவில் கல்லூரியின் துறை தலைவர்கள் பேராசிரியர்கள் மாணவிகள் பெற்றோர்கள்
உட்பட பலர் கலந்து கொண்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“