கோவையில் குடியிருப்புப் பகுதியில் புகுந்த பாம்பு பிடிக்க முயன்ற பாம்பு பிடி வீரரை பாம்பு கடித்த நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோவை தொண்டாமுத்தூர் குடியிருப்புப் பகுதியில் பாம்பு ஒன்று புகுந்து இருப்பதாக தகவல் வந்தது. அந்த தகவலின் அடிப்படையில் அங்கு பாம்பு பிடிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த சந்தோஷ் என்ற பாம்பு பிடி வீரருக்கு நாகப் பாம்பு கடித்தது.
கடந்த 20 ஆண்டுகளாக கோவை பகுதிகளில் ராஜ நாகம் உள்ளிட்ட பல விஷ பாம்புகளை குடியிருப்பு பகுதிகளில் இருந்து பிடித்து வனப் பகுதியில் விடுவித்து வருகிறார் சந்தோஷ்.
இந்நிலையில் அவருக்கு பாம்பு கடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பாம்பு கடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
அவரது இறப்புக்கு இயற்கை வன உயிரின ஆர்வலர்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்