இஸ்லாமிய மக்களுக்காக ஏராளமான திட்டங்களையும் உதவிகளையும் செய்த ஒரே கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என முன்னாள் அமைச்சர் மற்றும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.
அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும் எஸ்.பி.வேலுமணி ரம்ஜான் பண்டிகையொட்டி இஸ்லாமிய மக்களுக்கு ரம்ஜான் பொருற்களின் தொகுப்பு வழங்கும், நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இஸ்லாமிய மக்களுக்கு ரம்ஜான் பொருட்களின் தொகுப்புகளை வழங்கினார்.
கோவை சிறுபான்மையினர் பிரிவு துணைச் செயலாளர் கோட்டை ஹக்கிமின் தாய், தந்தையர் லத்தீப் பதுரும்மா அறக்கட்டளையின் சார்பில் போத்தனூர் சாலை திருமறை நகர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் 1,500க்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்களுக்கு ரம்ஜான் பொருட்களின் தொகுப்புகளை வழங்கி சிறப்பித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சரும் எஸ்.பி. வேலுமணி பேசியதாவது, நேற்று முன்தினம் சென்னையில் நடந்த இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் நானும்,கழக பொதுச் செயளாலருமான எடப்பாடியாரும் கலந்து கொண்டோம்.
இந்த புனித மாதத்தில் பிறருக்கு உதவும் என்னம் ஹக்கீமை போல் அனைவருக்கும் வர வேண்டும் மேலும் 100"பேருக்கு இந்த உதவியை துவங்கியவர் இன்று 7 வது ஆண்டாக ஏழை மக்களுக்கு கொடுத்து வருகிறார் அவரை பாராட்டுகிறேன்.
எடப்பாடியார் தலைமையில் இஸ்லாமிய மக்களுக்காக ஏராளமான திட்டங்களையும், உதவிகளையும் செய்து உள்ளோம் குறிப்பாக இஸ்லாமியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான கபர்ஸ்தான் கட்டி கொடுத்தது அ.தி.மு.க அரசு, மேலும் ஹஜ் யாத்திரைக்காக மத்திய அரசு மானியத்தை நிறுத்திய போதும் அ.தி.மு.க அரசு தடையின்றி நிதி உதவி வழங்கியது.
அதுபோல் ஹஜ் புனித யாத்திரை செல்பவர்கள் சென்னையில் தங்குவதற்க்கு ஓய்வு இல்லம் கட்டி கொடுத்தது அ.தி.மு.க அரசு என்று பெருமையுடன் கூறினார்.
பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்