சென்னையில் உள்ள 5 அரசு கொரோனா சிகிச்சை மருத்துவமனைகளில் செவ்வாய்க்கிழமை வரை 10,986 புதிய தொற்றுகளுடன் 75% சதவீதம் நிரம்பியுள்ளது. 25% படுக்கை வசதிகள் மட்டுமே காலியாக உள்ளன.
தமிழகத்தில் நேற்று புதிதாக 13,205 புதிய தொற்றுகள் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் 10 லட்சத்து 13 ஆயிரத்து 378 தொற்றுகள் பதிவாகியுள்ளன. தமிழ்நாடு முழுவதும் தற்போது 79,808 கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர். அதேபோல, சென்னையில் மட்டும் 28,005 தொற்றுகள் செயலில் உள்ளன.
கொரோன் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவீதத்துக்கும் குறைவாக நுரையீரல் பாதிப்புடன் ஆக்ஸிஜன் சுவாசம் தேவைப்படும் தொற்று நோயாளிகள் சுகாதார மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இது போல 11 சுகாதார மையங்களில் ஆக்ஸிஜன் சுவாச வசதி உள்ள 1,800 படுக்கைகளில் 648 படுக்கைகள் அதாவது 36% படுக்கைகள் நோயாளிகளால் நிரம்பியுள்ளன.
லேசான அறிகுறிகள் உள்ள கொரோனா தொற்று நோயாளிகள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள் அல்லது கொரோனா நோயாளிகள் பராமரிப்பு மையங்களுகு அனுப்ப அறிவுறுத்தப்படுகிறார்கள்.
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 14 கொரோனா நோயாளிகள் பராமரிப்பு மையங்களில் உள்ள 11,645 படுக்கைகளில் 5,559 படுக்கைகள் நிரம்பியுள்ளன. சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் 114 தனியார் மருத்துவமனைகளில் 108 மருத்துவமனைகள் தமிழக அரசின் கொரோனா தடுப்பு வலைதளத்தில் தங்கள் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிலவரங்களை அப்டேட் செய்துள்ளது. அதன்படி, 32 மருத்துவமனைகளில் 100% படுக்கைகள் நிரம்பியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள 5 அரசு கொரோனா சிகிச்சை மருத்துவமனைகளில் செவ்வாய்க்கிழமை வரை 10,986 புதிய தொற்றுகளுடன் 75% சதவீதம் நிரம்பியுள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனால், சென்னையில் உள்ள அரசு கொரோனா சிகிச்சை மருத்துமனைகளில் 25% படுக்கை வசதிகள் மட்டுமே காலியாக உள்ளது என்பது தெரிய வந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்று எண்ணிக்கை மேலும் அதிகரித்தால் அது சுகாதாரத்துறையினருக்கு கவலை அளிப்பதாக இருக்கும் என்று தெரிகிறது.
தமிழக அரசு நடத்தும் மருத்துவமனைகள் மற்றும் கோவிட் பராமரிப்பு மையங்களில் நோயாளிகளின் சிகிச்சையை நிர்வகிக்கும் மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் கட்டுப்பாட்டு அறையில் இருந்து ஊடகங்களிடம் பேசிய மருத்துவக் கல்வி இயக்குனர் நாராயணபாபு, “சென்னையில் உள்ள ஐந்து கோவிட் 19 நோயாளிகள் பராமரிப்பு மையங்களில் 4 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் கிண்டியில் உள்ள அரசு கோவிட் மருத்துவமனையில் வெறும் 25% படுக்கைகள் மட்டுமே காலியாக இருகிறது. இந்த கோவிட் 19 நோயாளிகள் பராமரிப்பு மையங்களில் மொத்தம் 4,368 படுக்கைகள் உள்ளன. இவற்றில் 3,269 கோவிட் நோயாளிகள் உள்ளனர். இதில், 50% க்கும் அதிகமான நுரையீரல் தொற்று உள்ள நோயாளிகளை மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கிறோம். இந்த நோயாளிகளில் பெரும்பாலோருக்கு ஆக்ஸிஜன் சுவாச உதவியுடன் மூன்றாம் நிலை பராமரிப்பு தேவைப்படுகிறது” என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"