கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரு நபரிடம் இருந்து ஒன்பது பேருக்கு பரவும் வாய்ப்பு உள்ளது என்று அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த ஐ.சி.எம்.ஆர்., வெக்டார் கன்ட்ரோல் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதனால் பொது இடங்களில் அல்லது பொது போக்குவரத்து வாகனங்களை பயன்படுத்தும்பொழுதும் மக்கள் கவனத்துடன் பயணிக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
கொரோனா நோய்ப்பரவலை ஆய்வு செய்ய, சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிவியல் இதழில் வைரஸ் நோய், கோவிட் 19 தொற்று சூழ்நிலையை உருவகப்படுத்த, விஞ்ஞானிகள் 21-ஜி தாம்பரம் டு பிராட்வே பஸ் வழியை ஆய்வுக்கு பயன்படுத்திக்கொண்டனர்.
சென்னையில் 36.1 கிலோமீட்டர் வழித்தடத்தில் உள்ள 40 ஸ்டாப்புகளில் ஒவ்வொன்றிலும் ஐந்து பயணிகள் ஏறுவார்கள் அல்லது இறங்குவார்கள் என்று அவர்கள் கருதினர். எல்லா நேரங்களிலும் 20 பயணிகள் இருப்பார்கள்.
கணித மாதிரியின் மூலம், பாதிக்கப்பட்ட நபர்களை அடுத்தடுத்த பேருந்து நிறுத்தங்களில் சீரற்ற முறையில் நுழையவும் வெளியேறவும் அனுமதிக்குமாறு வலியுறுத்தினர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil