Advertisment

தமிழகத்தில் கொரோனா: மாவட்ட வாரியாக பாதிப்பு விபரம்

தமிழகத்தில் அரியலூர், பெரம்பலூர் மற்றும் ஈரோட்டில் யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தமிழகத்தில் கொரோனா: மாவட்ட வாரியாக பாதிப்பு விபரம்

Coronavirus in Tamil Nadu: தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பிட்ட சில மாவட்டங்களில் தொடர்ந்து எண்ணிக்கைகள் அதிகரித்த நிலையில், சமீப நாட்களில் தமிழகம் முதுவதுமே கொரோனா தனது கோர தாண்டவத்தை நிகழ்த்தி வருகிறது.

Advertisment

நேற்று தமிழகத்தில் புதிதாக 3,616 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

மீண்டும் ஊரடங்கு வாய்ப்பு இல்லை: முதல்வர் பழனிசாமி

மாவட்டவாரியாக புதிய தொற்றுகள்

சென்னையில் புதிதாக கொரோனா தொற்றால் 1203 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் 334 பேருக்கும், விருதுநகரில் 253 பேருக்கும், திருவள்ளூரில் 217 பேருக்கும், கன்னியாகுமரியில் 119 பேரும், காஞ்சிபுரத்தில் 106 பேருக்கும், ராணிப்பேட்டையில் 125 பேரும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வேலூரில் 117 பேருக்கும், திருநெல்வேலியில் 181 பேருக்கும், தூத்துக்குடியில் 144 பேருக்கும், ராணிப்பேட்டையில் 125 பேருக்கும், திருவண்ணாமலையில் 99 பேருக்கும், தேனியில் 94 பேருக்கும், தென்காசியில் 62 பேருக்கும், திருச்சியில் 55 பேருக்கும், புதுக்கோட்டையில் 43 பேருக்கும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதோடு, கடலூரில் 65 பேருக்கும் சிவகங்கையில் 15 பேருக்கும், கோவையில் 36 பேருக்கும், செங்கல்பட்டில் 87 பேருக்கும், கள்ளக்குறிச்சியில் 28 பேருக்கும், ராமநாதபுரத்தில் 22 பேருக்கும், தஞ்சாவூரில் 34 பேருக்கும், திருவாரூரில் 23 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதவிர திருப்பூரில் 17 பேர், திண்டுக்கல்லில் 7 பேர், தர்மபுரியில் 4 பேர், நாமக்கல்லில் 5 பேர், நாகப்பட்டினத்தில் 4 பேர், நீலகிரியில் 5 பேர், விழுப்புரத்தில் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் புதிய சாதனை; கொரோனாவில் இருந்து குணமடைந்த 4,545 பேர் டிஸ்சார்ஜ்

புதிய தொற்று இல்லை

தமிழகத்தில் அரியலூர், பெரம்பலூர் மற்றும் ஈரோட்டில் யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை

மாவட்டவாரியாக சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை

அரியலூர் - 23

செங்கல்பட்டு - 2,851

சென்னை - 22,374

கோவை - 548

கடலூர் - 410

தர்மபுரி - 54

திண்டுக்கல் - 358

ஈரோடு - 196

கள்ளக்குறிச்சி - 554

காஞ்சிபுரம் - 1,663

கன்னியாகுமரி - 438

கரூர் - 45

கிருஷ்ணகிரி - 118

மதுரை - 3,486

நாகை - 184

நாமக்கல் - 26

நீலகிரி - 101

பெரம்பலூர் - 14

புதுக்கோட்டை - 247

ராமநாதபுரம் - 953

ராணிப்பேட்டை - 703

சேலம் - 869

சிவகங்கை - 288

தென்காசி - 273

தஞ்சாவூர் - 172

தேனி - 793

திருப்பத்தூர் - 184

திருவள்ளூர் - 1,744

திருவண்ணாமலை - 1,311

திருவாரூர் - 206

தூத்துக்குடி - 535

திருநெல்வேலி - 591

திருப்பூர் - 96

திருச்சி - 435

வேலூர் - 1,320

விழுப்புரம் - 487

விருதுநகர் - 670

விமானநிலைய கண்காணிப்பு

வெளிநாடு - 207

உள்நாடு - 215

ரயில் நிலைய கண்காணிப்பு - 97

என மொத்தம் 45,839 பேர் தமிழகத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Coronavirus Covid 19
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment