CoVid -19, Coronavirus Outbreak, Government Rajaji Hospital, Madurai, Tamil Nadu coronavirus
மதுரை அண்ணா நகர் பகுதியை சேர்ந்த 54 வயது நோயாளிக்கு கோவிட் -19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
இந்த நபருக்கு சுவாச கோளாறுக்கான அறிகுறிகள் இருந்ததால், கடந்த சனிக்கிழமை, தனியார் மருத்துவமனையை நாடியுள்ளார். அங்கு அவருக்கு கோவிட் -19 இருப்பதாக அறிந்த காரணத்தினால், டாக்டர்கள் அவரை அரசு மருத்துவமனைக்கு செல்ல பரிந்துரைத்தனர். இதன்படி அவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கோவிட் -19 தொற்று இருப்பதை, அரசு மருத்துவமனை டாக்டர்கள் நேற்று ( 23ம் தேதி) உறுதி செய்துள்ளனர்.
Advertisment
Advertisements
தனியார் மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது, அந்த நோயாளி எங்கள் மருத்துவமனையில் அரை நாள் இருந்தார். அப்போது அவரிடம் வெளிநாட்டிற்கு சமீபத்தில் சென்று வந்தீர்களா என்று கேட்டதற்கு அவர் இல்லை என்று பதிலளித்தார். பயண விபரங்கள் தொடர்பாக அவர் எதுவும் தகவல் தெரிவிக்கவில்லை. அவருக்கு வைரல் நிமோனியாவை தொடர்ந்து, பன்றிக்காய்ச்சல் சோதனையும் மேற்கொள்ளப்பட்டது. அதற்குப்பின்னரே, அவரை அரசு மருத்துவமனையில் அட்மிட் ஆக பரிந்துரைத்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
அவருக்கு பன்றிக்காய்ச்சல் சோதனையில் நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்தவுடனே, அவரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டோம். அங்கு அவருக்கு கோவிட்-19 சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவரிடம் இருந்து பெறப்பட்ட மாதிரிகள், சோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பப்பட்டன.
சோதனையில் பாசிட்டிவ் ரிசல்ட் வந்ததை தொடர்ந்து, அவருக்கு கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவிட் -19 தொற்று கொண்ட நோயாளி, அந்நோய் பாதித்த நாடுகளுக்கு சமீபகால அளவில் சென்றுவந்ததற்கான எவ்வித ஆவணமும் இல்லை. அவர் கொஞ்சநாளாகவே, மதுரையை விட்டு எங்கும் செல்லவில்லை. அவருடன் தொடர்புடைய நபர்களிடமும் இந்த தொற்று குறித்த சோதனையை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாக அரசு மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil