covid 19 lockdown : கடந்த 100 நாட்களாக லண்டனில் டில்பர் துறைமுகத்தில் நின்றுக்கொண்டிருந்த ராட்சத கப்பலில் சமையல் பணிகளை கவனித்துக் கொண்டிருந்த தமிழகத்தை சேர்ந்த சி.எம்.வி ஊழியர் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
Advertisment
தமிழ்நாட்டை சேர்ந்த 43 வயதான பாலாஜி கிருஷ்ண குமார் ஐரோப்பிய நாட்டிற்கு சொந்தமான சொகுசு கப்பலில் சி.எம்.வி ஊழியராக பணியாற்றி வருகிறார். பாலாஜி, கப்பலில் இருக்கும் சமையல் அறைகளில் முன்னணி சமையல் கலைஞர்களில் ஒருவர். இந்நிலையில், பாலாஜி சொந்த ஊர் திரும்ப பல நாட்களாக காத்துக் கொண்டிருந்த நிலையில், நேற்று அதிகாலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். பாலாஜியின் இந்த மறைவு அவரின் நண்பர்கள் மற்றும் மற்ற ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலாஜியை போல், தமிழ்நாடு, கேரளாம், டெல்லி, கோவா என பல இளைஞர்கள் ஐரோப்பிய கப்பலில் சி.எம்.வி ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பலருக்கு ஓராண்டு அல்லது இராண்டு ஒப்பந்த காலங்கள் முடிவடைந்து விட்டன. இருப்பினும், கொரோனா ஊரடங்கு காரணமாக இவர்கள் சொந்த்த ஊர் திரும்ப முடியாமல் கப்பலில் சிக்கி தவித்தனர். பலர், தனது குடும்பங்களை பார்க்க முடியாமல் மன உளைச்சலுக்கும் ஆளாகினர்.
அந்த வகையில், சென்னை தாம்பரத்தை இருப்பிடமாக கொண்ட பாலாஜி, கடந்த சில நாட்களாக மன உளைச்சலுடன் இருந்துள்ளார். காரணம், பாலாஜியின் பணி ஒப்பந்தம் மார்ச் மாதத்துடன் நிறைவடைந்து விட்டது. தமிழகம் திரும்ப தயாராக இருந்த பாலாஜி கொரோனா ஊரடங்கால் கப்பலில் மாட்டிக் கொண்டார். இந்த மன உளைச்சலே அவரின் மரணத்திற்கு காரணம் என்கின்றனர் அவருடன் பணிப்புரியும் மற்ற சி.எம்.வி ஊழியர்கள்.