சென்னை மாநகராட்சியில் அதிக மக்கள் நடமாட்டம் காணப்படும் குடுசைப் பகுதிகளில் கொரோனா தொற்று கண்டறியப்படும் விகிதம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
இதுதொடர்பாக வெளியான செய்தி குறிப்பில், " சென்னையின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில், மக்கள் தொடகை அடர்த்தி அதிகமுள்ள குடிசைப் பகுதிகளின் கொரோனா பாதிப்பு சதவீதம் 7-10 என்ற விகிதத்தில் உள்ளது. மேலும், சென்னையில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள 1,900க்கும் மேற்பட்ட குடிசைப் பகுதிகள் அடையாளம் காணப்பட்டன. அதில்,கடந்த 45 நாட்களாக 1,500க்கும் அதிகமான பகுதிகளில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று பதிவு செய்யப்படவில்லை என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி. பிரகாஷ் கூறியதாக டைம்ஸ் ஆப் இந்தியா மேற்கோள் காட்டியது.

கடந்த 45 நாட்களில் குடிசைப் பகுதிகளில் கொரோனா பாதிப்பு சதவீதம் வீழ்ச்சி அடைந்து வருவதாக சுகாதார இணை ஆணையர் மதுசூதன் ரெட்டி கூறியதாகவும் அது தெரிவித்தது.
மதுசூதன் இதுகுறித்து கூறுகையில்,"மே மாத காலங்களில், குடிசைப் பகுதிகளில் சமூக அளவிலான நோய்த் தடுப்பு திட்டங்களை நாங்கள் வடிவைத்தோம். முகக்கவசம் அணிதல், சோப்பு தண்ணீர் கொண்டு அடிக்கடி கைகளை கழுவுதல்,சமூக விலகல் நெறிமுறையை பராமரித்தல் குறித்த விழிப்புணர்வை அவர்களிடம் கொண்டு சென்றோம் . இதற்காக, 92 தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியை நாங்கள் கோரினோம். மே 19 அன்று, தொடங்கிய, இந்த நடவடிக்கையின் பயனை நாங்கள் இன்று காண்கிறோம்”என்று கூறினார்.
தன்னார்வலர்கள் தினமும் 200 வீடுகளுக்கு சென்றனர். குடும்ப உறுப்பினர்களுடன் சுமார் ஒரு மணி நேரம் உரையாடி, விதிகள் குறித்து அவர்களுக்கு விளக்கினர். இதன்மூலம, 70% மக்கள் முகக்கவசம் அணிவதை நாங்கள் உறுதி செய்தோம்," என்றும் அவர் தெரிவித்தார்.
தற்போது, பெருங்குடி, கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, அண்ணா நகர், சோழிங்கநல்லூர் போன்ற மண்டலங்களில் கொரோனா பெருந்தொற்று அதிகமாக காணப்படுவதால், அங்கிருக்கும் குடியிருப்போர் நலச் சங்கத்தின் உதவியைப் பெற சென்னை மாநகாராட்சி திட்டமிட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil