சென்னையில் சரிபாதி கொரோனா நோயாளிகள் இந்த 3 மண்டலங்களில்!

சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று பாதிபுக்குள்ளான பெரும்பாலான மக்கள் 50 வயதுக்கும் குறைவாக உள்ளனர் என்று கண்டறியப்பட்டுள்ளது. மொத்த எண்ணிகையில்(373), 50 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை வெறும் 58-க உள்ளது

By: Updated: April 23, 2020, 08:23:06 AM

நேற்று மட்டும் சென்னையில் புதிதாக , 15 பேருக்கு தொற்று உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று மொத்தம் 373 பேருக்கு இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 103 நோயாளிகள் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.  இதுவரை  சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக எட்டு பேர் உயிர் இழந்துள்ளனர்.

 

சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றின் மொத்த எண்ணிக்கையில், 54% சதவீதம் வடசென்னையின் மூன்று பகுதிகளில் இருந்து பதிவாகியுள்ளன. ராயபுரம் (117) , திரு வி.க நகர்(42) , தொண்டையார்பேட்டை (46) போன்ற இடங்கள் அதிகமாக பாதிப்படைந்த பகுதிகளாக விளங்குகிறது. கோடம்பாக்கம் பகுதியில் 20 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பற்றிந்தாலும், அதில் 16 பேர் முறையான மருத்துவமனை கண்காணிப்புக்குப் பின் குணமடைந்தது உள்ளனர்.

வடசென்னை முழுவதும் குறிப்பாக ராயபுரம் பகுதிகளில், கொரோனா வைரஸ் சமூகப் பரவல் தடுப்பதை உறுதி செய்யும் நோக்கில் செயல்பட்டு வருவதாக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார். “இது ஒரு சவாலான சூழ்நிலை என்றாலும், நாங்கள் அதை திறம்பட கையாளுகிறோம். மக்கள் பயப்படத் தேவையில்லை,” என்றும் தெரிவித்தார்.

சென்னையில் அண்ணா நகர் (1),  ராயபுரம் (5) , திரு வி.க நகர்(1) , தொண்டையார்பேட்டை(1)  போன்ற பகுதிகள் கொரோனா வைரஸ் இறப்பை பதிவு செய்துள்ளன.

சோழிங்கநல்லூர் (2),பெருங்குடி (8), அடையார்(7)  போன்ற தென்சென்னை பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு மிகவும் குறிந்த அளவில் உள்ளது.

மேலும், சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று பாதிபுக்குள்ளான பெரும்பாலான மக்கள் 50 வயதுக்கும் குறைவாக உள்ளனர் என்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையின் மொத்த எண்ணிகையில்(373), ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 58-க உள்ளது. 10 வயதுக்கு உட்பட்ட நான்கு பேர் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நான்கில், மூன்று ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை அடங்கும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Covid 19 positive cases greater chennai corporation confirmed cases

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X