scorecardresearch

கொரோனா பாதிப்பு: வைகோ ஹெல்த் அப்டேட்

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார்.

கொரோனா பாதிப்பு: வைகோ ஹெல்த் அப்டேட்

மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சல், தொண்டை வலி ஆகியவற்றால் அவதிப்பட்டு வந்த வைகோ கொரோனா பரிசோதனை செய்து கொண்டதில், அவருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது.

தற்போது, மருத்துவரின் அறிவுரைப்படி அவர் சென்னை அண்ணா நகரில் உள்ள தனது இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். வீட்டில் இருந்தபடியே அவர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவர்களின் அறிவுரைப்படி மருந்து- மாத்திரைகளை உட்கொண்டு வருகிறார்.

மேலும், கடந்த சில நாள்களாக தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ம.தி.மு.க.வினர் கூறுகையில், “கடந்த சில நாட்களுக்கு முன்பு வைகோவுக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது. பின்னர் அது அதிகரித்து சளி தொல்லை அதிகமானது. தற்போது அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமையில் உள்ளார்” என்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Covid 19 positive for mdmk general secretary vaiko