/tamil-ie/media/media_files/uploads/2020/03/vb-tweet.jpg)
covid-19, covid-19 positive increased in tamil nadu, coronavirus positiv three patients in villupuram, தமிழகத்தில் புதிதாக கொரோனா வைரஸ், விழுப்புரத்தில் கொரோனா வைரஸ், அமைச்சர் விஜயபாஸ்கர், news covid-19 positive cases announce in tamil nadu, minister vijayabaskar announced new covid-19 cases, chennai new covid-19 cases, villupuram new covid-19 cases, madurai new covid-19 cases, latest new corona news
தமிழகத்தில் இன்று விழுப்புரத்தைச் சேர்ந்த மூவர் உட்பட ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதன் மூலம், மாநிலத்தில் கொரோனா பாதிப்பு என்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் புதிய கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உலக அளவில் 37,000-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் 1200-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 32 பலியாகி உள்ளனர்.
தமிழகத்தில் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு, ஓமனில் இருந்து சென்னை வந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 45 வயது பொறியாளருக்கு கடந்த மார்ச் 7-ம் தேதி கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மதுரையைச் சேர்ந்த ஒருவர் பலியானார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை மிக குறைவாக இருந்த நிலையில் கடந்த ஒருவாரத்தில் இந்த எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள், வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள், வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்கள், அவர்களுடன் தொடர்புடையவர்கள் என அனைவரையும் சுகாதாரப் பணியாளர்கள் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர். கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களை அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சூழலில், கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை தமிழகத்தில் நேற்றுவரை 67 ஆக இருந்த நிலையில் இன்று விழுப்புரத்தைச் சேர்ந்த மூவர் உள்பட 7 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது.
#TN has 7 new #COVID19 +ve cases. 43 Y M,travel History to Tvm at #RGGH. 28 Y M co-worker of earlier +ve Pt at Tiruvannamalai MC, 3 Male Pts, at #Vilupuram MC with Travel Hist to Delhi, 2 Male Pts at # Madurai Rajaji,Trav.Hist to Delhi.All Pts in isolation & stable. @MoHFW_INDIA
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) March 31, 2020
இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், “தமிழகத்தில் இன்று புதிதாக 7 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்துக்கு பயண வரலாற்றைக் கொண்ட 43 வயது ஆண் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவருடன் இணைந்து வேலை செய்த 28 வயது இளைஞருக்கும் பரிசோதனையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அண்மையில் டெல்லிக்கு பயணம் செய்திருந்த விழுப்புரத்தைச் சேர்ந்த 3 பேருக்கு கோரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் விழுப்புரம் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதே போல, அண்மையில் டெல்லிக்கு பயணம் செய்திருந்த 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிசை அளிக்கப்படுகிறது. கொரொனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களின் உடல்நிலை நல்ல நிலையில் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் 3 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பது குறித்து ஊடகங்களிடம் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், “ டெல்லி மாநாட்டில் பங்கேற்ற விழுப்புரத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. விழுப்புரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.