COVID-19 positive man missing in chennai : கொரோனா தொற்று உறுதியான 72 வயது முதியவர் சென்னையில் மாயமானர். கடந்த 12 நாட்களாக தனது தந்தையை தேடி அலையும் மகன் பொதுமக்களிடம் உதவி கேட்டுள்ளார்.
Advertisment
ஆதிகேசவன் என்ற அந்த முதியவர், கடந்த ஜூன் 10 ஆம் தேதி, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கேம்சி மருத்துமனையில் கொரோனா சோதனைக்காக அழைத்து வரப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆதிகேசவனுடன் மேலும் 5 பேரை மாநகராட்சி ஊழியர்கள் கேம்சி மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர்.
இந்நிலையில், ஆதிகேசவனுக்கு கொரோனா தொற்று இருப்பதையும், அவர் கேம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை, அவரின் மகனிடம் சுகாதாரத்துறை ஆய்வாளர் தகவல் கொடுத்துள்ளார். ஆதிகேசவனிடம் மொபைல் போன் இல்லை.
ஆய்வாளர் கூறிய தகவலை கேட்டறிந்து, ஆதிகேசவனின் மகன், மருத்துவமனை விரைந்தார். ஆதிகேசவன் தனக்கு ஒதுக்கப்பட்ட அறையின் படுக்கையில் படுத்துக் கொண்டிருப்பதையும் அங்கிருந்த ஊழியர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர்.
Advertisment
Advertisements
ஆனால், மருத்துவமனை முழுவதும் தேடியும் தனது தந்தையை காணவில்லை என்று கண்கலங்கி நிற்கிறார் ஆதிகேசவனின் மகன். முதியவரை அழைத்து வந்த ஊழியர்களும் அவரை மருத்துவமனையின் எக்ஸ்ரே வார்டில் இறக்கிவிட்டு சென்றதாக கூறுகின்றனர்.
ஆனால், கடந்த 12 நாட்களாக ஆதிகேசவனை காணவில்லை என்று சென்னை முழுவதும் அவரின் மகன் தேடி வருகிறார்.
சந்தேகத்தை உறுதிப்படுத்திக் கொள்ள ஆதிகேசவனின் மகன் தனது தந்தையின் படத்தை கொரோனா வார்டில் இருக்கும் நோயாளிகளுக்கும் அனுப்பி விசாரித்தார். அவர்களும் ஆதிகேசவன் தங்களுடன் இல்லை என்பதை உறுதி செய்துள்ளனர்.
காணாமல் போன முதியவர் ஆதிகேசவன்
அதனைத்தொடர்ந்து, தனது தந்தையை காணவில்லை என்று ஆதிகேசவனின் மகன் பரங்கிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், தனது தந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு பொதுமக்களிடமும் உதவி கோரியுள்ளார்.
(ஆதிகேசவன் பற்றி தகவல் தெரிந்தால் அழைக்க வேண்டிய எண் - 7418975507)
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”