சென்னையில் 200 வார்டுகளிலும் மைக்ரோ திட்டம்: 11,500 களப்பணியாளர்கள் தயார்

பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளிலும் 200 உதவிப் பொறியாளர்கள், இளநிலைப் பொறியாளர்களைக் கோவிட்-19 நடவடிக்கை குழுத் தலைவர்களாக நியமித்து மைக்ரோ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், 11,500 களப்பணியாளர்கள் தினமும் வீடு வீடாகச் சென்று சளி, காய்ச்சல், இருமல் அறிகுறி இருக்கிறதா என்று ஆய்வு செய்து வருவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளிலும் 200 உதவிப் பொறியாளர்கள், இளநிலைப் பொறியாளர்களைக் கோவிட்-19 நடவடிக்கை குழுத் தலைவர்களாக நியமித்து மைக்ரோ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், 11,500 களப்பணியாளர்கள் தினமும் வீடு வீடாகச் சென்று சளி, காய்ச்சல், இருமல் அறிகுறி இருக்கிறதா என்று ஆய்வு செய்து வருவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பெருநகர சென்னை மாநகராட்சியில் நடைபெற்றுவரும் 680 மருத்துவ முகாம்களை பயன்படுத்திக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பாக மாநில அளவில் ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் செவ்வாய்க்கிழமை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, “பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 33,000 பணியாளர்கள் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளையும் மற்றும் தூய்மைப் பணிகளையும் செய்து வருகின்றனர். பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் உள்ள 200 கோட்டங்களில் 200 உதவிப் பொறியாளர்கள், இளநிலைப் பொறியாளர்களை குழுத் தலைவராக நியமித்து மைக்ரோ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இக்குழுவில் மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், மற்றும் இதர அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகின்றனர். இந்த குழுவினர் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட நபரை மருத்துவமனைக்கு அனுப்ப உதவி செய்தல், அவர்களுடைய தொடர்புத் தடமறிதல் ஆகிய பணிகளில் ஈடுபட்டு தகவல்களை உடனுக்குடன் தெரிவிப்பார்கள். பெருநகர சென்னை மாநகராட்சியில் நியமிக்கப்பட்டுள்ள 11,500 களப்பணியாளர்கள் தினமும் வீடு வீடாகச் சென்று சளி, காய்ச்சல், இருமல் அறிகுறி இருக்கிறதா என்று ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும், இந்த பணிகளில் மாநகராட்சி பள்ளி ஆசிரியர், ஆசிரியைகளும் ஈடுபட்டு வருகின்றனர்.” என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Covid 19 response team greater chennai corporation micro plan minister sp velumani

Next Story
22 வருட ராணுவ அர்ப்பணிப்பு: ஹவில்தார் பழனி எல்லையில் வீர மரணம்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com