புதன்கிழமை தமிழகத்தில் புதிதாக 16,665 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. ஒரே நாளில் 98 பேர் உயிரிழந்த நிலையில், 15,114 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். கொரோனா பாதித்து 1,10,308 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,30,167 ஆக உள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு 13,826 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த ஒரு வாரத்தில், வைரஸ் தொற்று காரணமாக 568 பேர் உயிரிழந்துள்ளனர்.ஏப்ரல் 22 முதல் ஏப்ரல் 28 வரையிலான காலகட்டத்தில் மாநிலத்தில் 1.05 லட்சம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஏப்ரல் 1 முதல் 7 வரை 102 பேர் உயிரிழந்தனர். அப்போது 13,548 புதிய கொரோனா பாதிப்பு பதிவானது. வைரஸ் தொற்றுக்கான இரட்டிப்பு காலம் ஏப்ரல் 7 –ம் தேதி 173 நாட்களில் இருந்து புதன்கிழமை 48 நாட்களாக குறைந்தது. நோய் தொற்றின் பாதிப்பு எண்ணிக்கை குறையவில்லை என்றால், ஏழு வாரங்களில் மேலும் 11.3 லட்சம் கோவிட்-19 பாதிப்பு பதிவாகும்.
ஹாட்ஸ்பாடான சென்னையில் ஒரே நாளில் 4,764 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நாளில் 4,647 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டபோதும், நகரில் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 31,295 ஆக உயர்ந்துள்ளது.
ஏப்ரல் முதல் வாரத்தில் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 9,002 ஆக இருந்த நிலையில், ஏப்ரல் 22 முதல் ஏப்ரல் 28 வரையிலான காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 29,755 ஆக உயர்ந்துள்ளது. ஒரு வாரத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 43 லிருந்து 210 வரை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக புதன்கிழமை சென்னையில் 32 உயரிழப்புகள் பதிவாகியுள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 1,219 புதிய பாதிப்புகளும்,8 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளது. திருவள்ளூரில் 751 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 443 பேருக்கும் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னை பிராந்தியத்தில் சேர்ந்து 7,177 புதிய பாதிப்புகளும் 54 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. இப்பகுதியில் 47, 970 பேர் சிகிச்சையில் உள்ளனர். மற்ற வடக்கு மாவட்டங்களில் 1,540 புதிய பாதிப்புகளும் 15 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளது.
கோயம்புத்தூரில் 963 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில் 2 பேர் உயிரிழந்தனர். 8 மாவட்டங்களில் 3,346 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. 15 பேர் உயிரிழந்துள்ளனர். தெற்கில் உள்ள 10 மாவட்டங்களில் 3,082 புதிய பாதிப்புகளும் 9 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளது. மத்திய மண்டலங்களில் 1,518 புதிய பாதிப்புகளும் 5 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளது அதில் திருச்சியில் அதிகமாக 480 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
புதன்கிழமை 1,25,004 பேருக்கு ஆர்டி-பிசிஆர் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதுவரை மாநிலத்தில் 2.23 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil