கேரளாவில் அதிகரிக்கும் தொற்று: எல்லையோர மாவட்டங்களில் 100% தடுப்பூசி செலுத்த நடவடிக்கை

கேரளா – தமிழகம் எல்லையான 9 மாவட்ட மக்களுக்கு 100 சதவீத தடுப்பூசி போட வேண்டும் என்பதால் மத்திய அரசிடம் கூடுதல் தடுப்பூசியை கோரியுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

covaxin 2nd dose, ma subramanian

தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் டெல்லி சென்று, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை சந்தித்துப் பேசினார். சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் பிற உயர்அதிகாரிகள் உடன் சென்றனர். அப்போது, தமிழகத்துக்கான மருத்துவ தேவைகள் குறித்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “தமிழகத்திற்கு செப்டம்பர் மாதத்தில் 1.04 கோடி தடுப்பூசி தர மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. தமிழகத்தில் மாதத்திற்கு 2 கோடி மக்களுக்கு தடுப்பூசி போட முடியும். தமிழகத்திற்கு மக்கள் தொகை அடிப்படையில் தடுப்பூசி வழங்க வேண்டும் என வலியுறுத்தினோம். கேரள மாநில எல்லையை ஒட்டிய மாவட்டங்களில் 100 சதவீத தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதற்காக கூடுதல் தடுப்பூசிகளை கோரியுள்ளோம்.

தமிழகத்திற்கு ஜூன் மாதத்தில் 19 லட்சம் டோஸ் கூடுதல் தடுப்பூசியும், ஆகஸ்டில் 34 லட்சம் டோஸ் கூடுதல் தடுப்பூசியும் தரப்பட்டன. தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்ட முதல் நான்கு மாதங்களில் சுமார் 4.34 லட்சம் டோஸ் வீணடிக்கப்பட்ட பிறகு, பயன்படுத்தப்பட்ட குப்பிகளிலிருந்து 7 லட்சம் டோஸ்களை தமிழகம் மேலும் கொடுத்துள்ளது” என தெரிவித்தார்.

மேலும் பேசிய அமைச்சர்”மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகளை உடனே தொடங்க வேண்டும்.11 புதியஅரசு மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டே மாணவர் சேர்க்கை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.நீட் தேர்வில் உள்ள பிரச்சனைகள் பற்றியும் அமைச்சரிடம் எடுத்துரைத்தோம். நீட் தேர்வுக்கு எதிரான சட்டத்தை செப்டம்பர் 11 -ஆம் தேதிக்கு முன் தமிழகம் அறிமுகப்படுத்தும்” என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Covid spike kerala minister ma subramanian vaccinate 100 border district

Next Story
Tamil News Today: இங்கிலாந்து டெஸ்ட்; ரோகித் சர்மா அபார சதம்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com