ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு சென்னையில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. ஒட்டுமொத்தமாக கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 5 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.
கடந்த வார தொடக்கத்தில் 38,680 ஆக இருந்த நோயாளிகளின் எண்ணிக்கை இப்போது 24,290 ஆக குறைந்துள்ளது. கொரோனா தொற்று அதிகம் உள்ள பகுதிகளாக கோடம்பாக்கம் முதலிடத்தில் உள்ளது. இங்கு 2320 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. அதேபோல அண்ணா நகர் பகுதியில் 2258 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவிலிருந்து தொற்றிலிருந்து 4,91,462 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
திருவொற்றியூர், மணலி, மாதவரம் மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய 4 மண்டலங்களிலும் 1000க்கும் குறைவான பாதிப்புகள் பதிவாகியுள்ளது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், ஜூன் 6 ஆம் தேதி தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தது. சமீபத்தில் தடுப்பூசி போடப்பட்ட சராசரியாக 20,000 பேருடன் ஒப்பிடும்போது 8,713 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது.
தடுப்பூசி கிடைத்தவுடன் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும், கடந்த சில நாட்களுக்கு முன்பு தடுப்பூசி எண்ணிக்கை 35,000 என்ற அளவில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜூன் 6 ஆம் தேதி ஒரு நாளைக்கு 32,938 பேரை பரிசோதனை செய்யப்பட்டதில் , பாசிட்டிவ் விகிதம் 4.9% குறைந்துள்ளது. ஐந்து சதவிகிதத்திற்கும் குறைவான பாசிட்டிவ் விகிதம் பரவுவதைக் குறிப்பதாக என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"