Covid19 second wave Chennai high court will hear the cases through online : கொரோனா அதிகமாக பரவி வருகின்ற காரணத்தால் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இனி ஆன்லைன் மூலம் வழக்குகளை விசாரிக்கும் என்று தலைமை பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
முக்கிய வழக்குகள் மற்றும் ஜாமீன்களுக்கு மட்டுமே அரசு வழக்கறிஞர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் மற்ற அனைத்து வழக்குகளும் ஆன்லைன் மூலம் விசாரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 23ம் தேதி வரை இந்நிலை தொடரும் என்று கூறப்பட்டாலும் அதற்கு முதல்நாள் கொரோனா சூழல் குறித்து ஆய்வு செய்த பிறகு மீண்டும் புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படலாம் என்று உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பு நீதிமன்றங்களில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணனுடன் தலமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி மற்றும் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆலோசனை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil