/tamil-ie/media/media_files/uploads/2021/04/covishield.jpg)
covid19 second wave chennai : கொரோனா தொற்று தமிழகத்தில் அதிகரித்து வருகின்ற நிலையில் சுகாதாரத்துறையின் மீது அழுத்தத்தை குறைத்து, விரைவில் நலம் பெற நாம் என்ன செய்ய வேண்டும்? சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறிய வழிகாட்டு நெறிமுறைகள் இங்கே
உங்களுக்கு சுவை, வாசனை சக்தியை இழக்கும் நிலை, தலைவலி, தோல் உரிதல், காய்ச்சல், இருமல், சளி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் இல்லாமல் இருந்தால் நீங்கள் மருத்துவமனைக்கு செல்ல வேண்டாம்.
சோதனை செய்ய வேண்டும் என்றால் மாநகராட்சி உதவி மையத்தை அணுகவும்.
மாநகராட்சி ஊழியர் உங்களை உடல் வெப்பநிலை பரிசோதனை மையத்திற்கு அழைத்து செல்வார்.
நோய் தொற்று ஏற்பட்டவர்கள் தங்களின் சொந்த கார் அல்லது இரு சக்கர வாகனங்களில் இந்த மையங்களுக்கு செல்லலாம்.
உங்களுக்கு நோய் அறிகுறி இருந்தால் 108க்கு அழைக்கவும் அல்லது கொரோனா-19 உதவி மையத்தை அணுகவும்.
மிகவும் தீவிர நோய் அறிகுறிகள் இருந்தால் மட்டுமே மருத்துவமனையை அணுக வேண்டும்.
காய்ச்சல், இருமல் மற்றும் தலைவலி போன்ற குறைந்த அறிகுறிகள் இருந்தால் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளலாம்.
மாநகராட்சி சுகாதாரத்துறை ஆய்வாளர் நோயாளியை தொடர்பு கொண்டு இத்தகைய அறிகுறிகள் கொண்டவர்களுக்கு தேவையான ஆலோசனை வழங்குவார். பின்னர் சோதனை மையத்திற்கு அழைத்து செல்வார்.
அங்கு மருத்துவர் நோயாளியை பரிசோதனை செய்து தேவையான மருந்துகளை வழங்குவார்.
இரத்த பரிசோதனை, மார்பு - எக்ஸ்ரே, இரத்த அழுத்தம், ஆக்ஸிஜன் அளவு ஆகியவற்றை சோதனை இடுவார்கள். அந்த அறிக்கை அடிப்படையில் மேற்கொண்டு ஆலோசனை வழங்குவார் மருத்துவர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.